search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
    X

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

    • ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
    • கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழை பெய்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வட தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் 9-ந்தேதி வரை மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண அளவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகமாக பெய்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தின் தரவுகளின்படி, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. கடந்த நவம்பர் 5-ம் தேதி வரை கடந்த ஒரு மாதத்தில் மழை குறைவாக பெய்த ஒரே மாவட்டம் வயநாடு.

    அதிக மழைப்பொழிவு என்பது பருவத்திற்கான இயல்பான நிலையில் இருந்து 20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை அதிகமாகும்.

    Next Story
    ×