search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியை புகழ்ந்ததால் மனைவிக்கு தலாக் சொன்ன கணவர்
    X

    பிரதமர் மோடியை புகழ்ந்ததால் மனைவிக்கு "தலாக்" சொன்ன கணவர்

    • திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.
    • ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். அவருக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.

    அயோத்தி நகர சாலைகள், அங்குள்ள வளர்ச்சி, அழகு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் கணவர் முன்னிலையில் புகழ்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெரியவர்கள் சமாதானத்துக்கு பிறகு, மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கோபத்தில் இருந்த அர்ஷத், மரியமை அடித்து உதைத்தார். பிரதமர் மோடியையும் ஆதித்யநாத்தையும் வசைபாடிய அவர், தன் மனைவியை பார்த்து 'தலாக், தலாக், தலாக்' என்று மூன்று முறை கூறினார்.

    மேலும், அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றனர். மேற்கண்ட தகவல்களை பரைச் நகர போலீசில் மரியம் புகார் மூலம் தெரிவித்தார். அதன்பேரில், கணவர் அர்ஷத் உள்பட அவருடைய குடும்பத்தினர் 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×