என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு- தற்காலிக குழு அமைப்பு
- இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம்.
- 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்கக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பு, வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.