என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கிராமத்தில் திடீர் திடீரென பற்றி எரிந்த தீ- வீடுகளுக்கு தீவைத்த இளம்பெண் கைது
- முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம்.
- 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர்.
திருப்பதி:
திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கொத்தகனாம்பட்லா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வீடுகள், கொட்டகைகள், வைக்கோல் போர் உள்ளிட்டவை திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் ஆந்திரா தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தில் சிலர் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் அமானுஷ்ய வழிபாடுகள் செய்தனர். அந்த கிராமத்தை துரதிஷ்டம் பிடித்துள்ளதாகவும், கெங்கையம்மன் திருவிழா நடைபெறாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வதந்திகள் பரவியது. இதனால் கிராம மக்கள் நடுங்கினர். சிலர் ஊரை விட்டு தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி, அதிகாரிகள், எஸ்.வி.பல்கலைக்கழக வேதியியல், இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கிராமத்திற்கு வந்தனர். பயப்பட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில், கிராமங்களில் உள்ள 18 இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீசார் இறுதியாக கண்டுபிடித்தனர். அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரு மாதமாக 8 வீடுகள் மற்றும் 3 கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தது தெரிய வந்தது.
தாயின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பழிவாங்கும் எண்ணத்தில் கொட்டகைகள் வைக்கோல் போர், போன்றவற்றுக்கு தீ வைத்துள்ளார். தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.32,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சந்திரகிரி இன்ஸ்பெக்டர் ஓபுலேசு ஆகியோர் கூறியதாவது:-
முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம். பின்னர் ஜாலியாக சுற்றித்திரிபவர்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை பிடித்து தங்களது பாணியில் விசாரணை செய்தோம். பின்னர் அவர்களை அனுப்பி வைத்து, அவர்களின் நடத்தையை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இருப்பினும், 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர். ஒரு பெண் போலீஸ்காரர் இளம்பெண் வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து வந்தார். தீ விபத்து நடந்த நான்கைந்து இடங்களில் ஒரே மாதிரியான தீப்பெட்டிகள் இருந்தன.
இளம்பெண்ணின் வீட்டில் உள்ள தீப்பெட்டியுடன் பொருந்தியதால் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் தனது தாயின் நடத்தை சரியில்லாததால் அவரை மாற்றவே கிராமத்தில் தீ வைத்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்