search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.
    • அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை குளத்துமேடு வார்டு பகுதியான செயின்தெரேசா வீதி, குளத்துமேடு வீதி, நீடராஜப்பையர் வீதி ஆகிய பகுதிகளில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.

    தகவல் அறிந்த நேரு எம்.எல்.ஏ. அந்த பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மழை நீர் எளிதாக வெளி யேறும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரி பாதாள கழிவுநீர் தொட்டி குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய கேட்டு கொண்டார். அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆய்வின்போது உள்ளாட்சித் துறை இயக்கு னர் சக்திவேல், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி, நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர்கள் பன்னீர் செல்வம், நமச்சிவாயம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்
    • புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் அடுத்த நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரி நேற்று புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீனவர் களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தினால் புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகன ங்களும் சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் சம்பந்தமாக கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் புகாரின் அடிப்படையில் நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளான தேசப்பன், குப்புசாமி, அன்பு, ராமு, மாரியப்பன், ஜெயக்கொடி, மணிவண்ணன், மோகன்தாஸ், சுரேஷ் மற்றும் 76 பெண்கள் உள்ளிட்ட 153 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
    • வெற்றி இந்த தேசத்தின் குடிமக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வழியையும் கொண்டு வரும் என்று நான் கருதுகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 மாநில தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர், உள்துறை மந்திரி, பா.ஜனதா தேசிய தலைவர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    4 மாநில தேர்தல்களில் 3 மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்த வெற்றியானது மக்கள் பிரதமர் மீது வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சேவைக்கான வெற்றி யாகவும் அமைந் துள்ளது.

    உலக அளவில் சிறந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குவதை வெற்றி நிரூபிக்கிறது. மேலும், இந்திய மக்கள் பிரதமர் மோடியின் மீது வைத்திருக்கும் அன்பையும்

    வெற்றிகள் வெளிப் படுத்தி உள்ளன. இந்த தருணத்தில் பிரதமரை வாழ்த்துகிறேன்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பி யுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியி ருப்பதாவது:-

    3 மாநிலங்களில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் அளவுக்கு சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசத்திற்கு தங்களின் கடின அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும், மத்திய அரசின் திறமையான அரசியல் திறமையும் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்த வெற்றி இந்த தேசத்தின் குடிமக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வழியையும் கொண்டு வரும் என்று நான் கருதுகிறேன். இந்த மகத்தான வெற்றிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    பா.ஜனதா தேசியத் தலைவர் நட்டாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியி ருப்பதாவது:-

    4 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜனதா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவான ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வலிமையான தேசியக் கட்சி பா.ஜனதா என்பதை இந்தத் தேர்தல்கள் மீண்டும் நிரூபித்துள்ளன.

    தேசத்தைப் பாதுகாப்ப திலும், அதன் பெருமையை நிலை நாட்டுவதிலும், மக்கள் நலனிலும் பா.ஜனதா அரசுக்கு இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றி தருணத்தில் உங்களுடனும், உங்கள் கட்சி தொண்டர்களுடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

    • விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப்பட்டன.
    • ஏற்பாடுகளை துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் ஆதித்யாஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓட்டல் மேலாண்மை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்ப தற்காக பழங்கள் ஊற வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப்பட்டன. இந்த ஊறல் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

    இவ்வாறு தயாரிக்கப்படும் கேக் இந்த ஆண்டும் சிறப்பாக அமை யும் என்பது ஒரு ஐதீகம் என்று கருதப்படு கிறது. இது ஒரு பாரம்பரிய மான விழாவாகும்.

    இந்த விழா கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவ- மாணவிகள் முன்னிலையில் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    • அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா வலியுறுத்தல்
    • மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி.சேகர் அனுமதியுடன் இணைச் செயலாளர் லாவண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த 2 நாட்க ளாக விடாது தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கவர்னரும், அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

    அதேசமயம் அரசு சார்பில் 211 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் வந்து தங்கும் மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான். அதேசமயம் நிவாரண முகாம்களும் எங்கெங்கு உள்ளது என்ற விவரம் மக்களுக்கு தெரியவில்லை. எனவே அனைத்து அங்கன்வாடி மையங்க ளிலும் நிவாரண முகாம் களின் முகவரியை நோட்டீ சாக ஒட்ட வேண்டும்.

    மேலும் வயதான முதி யோர் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் அங்கன்வாடி ஊழியர்க ளுக்குத்தான் தெரியும்.

    எனவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வசிக்கும் அனைவரின் இல்லங்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று அவர்களின் நலன் மற்றும் தேவை குறித்து அறிந்து மருந்துகளும், உணவும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கவியரசு கண்ணதாசனின் இளையமகன் டாக்டர் கண்ணதாசன் ராமசாமி இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்.
    • சமுதாயப் பணிக ளைப் பாராட்டியும் கண்ண தாசனுக்கு தொடர்ந்து விழா எடுத்துவருவதை போற்றியும் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுக்கோட்டை கண்ண தாசன் இலக்கியச் சாரல் அமைப்பும் சி.எஸ்.கே குளோ பல் அறக்கட்டளையும் இணைந்து 6-ம் ஆண்டு முப்பெரும் விழா கொண்டாடினர்.

    இவ்விழாவில் புதுச்சேரி ராதே அறக்கட்டளை நிறுவனரும் கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத் தலைவருமான என்ஜினீயர் ராதே. தேவ தாசுக்கு மொழி, வரலாறு, இலக்கிய, சமுதாயப் பணிக ளைப் பாராட்டியும் கண்ண தாசனுக்கு தொடர்ந்து விழா எடுத்துவருவதை போற்றியும் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

    கவியரசு கண்ணதாசன் இலக்கியச் சாரல் நிறுவனர் திருமலை சேகர் முன்னிலையில் இலக்கியச் சாரல் ஜெயக்குமார் தலைமையில் கவியரசு கண்ணதாசனின் இளையமகன் டாக்டர் கண்ணதாசன் ராமசாமி இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். செயலர் முரளிதரன், கவிஞர் காவிரிமைந்தன் , பாவலர் தங்கம் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.

    • அமைச்சர் பொன்முடி உறுதி
    • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தூண்டில் வளைவு அமைக்க கோரி இன்று காலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நடுக்குப்பம் மீனவ பகுதி மக்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு ஏற்க னவே முதல்-

    அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவ பகுதிகளில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.
    • உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புயல்மழை காரணமாக வில்லியனூர் பாண்டியன் நகர், ஓம்சக்தி நகர், மூர்த்தி நகர், பட்டானிக்களம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனை அறிந்த எதிர்க்கட்சி தலைவருமான. சிவா நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.

    ஆய்வின்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறி யாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
    • கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தின் போது சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று கார்த்திகை 3-வது சோமவாரத்தை முன்னிட்டு பழமையான பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யொட்டி காலை 6 மணிக்கு, பால விநாயகர், வேதாம்பிகை, முருகர், சண்டிகேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜையும், காலை 10.30 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1,008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிரவாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.

    புதுச்சேரி, டிச.4-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பி.கே.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பிரதேச இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் டி.ராமச்சந்தி ரனின் புகழஞ்சலி அறிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். விழாவில் கலந்துகொண்டு சிற்ப்பித்த பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.

    விழா சிறப்பாக நடத்தி வெற்றி பெற ஒத்துழைப்பு அளித்த வக்கீல்கள் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொதுச் செயலாளர் திருமுருகன், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது இர்ஷாத், வட்டார த லைவர் ஆறுமுகம், பிரதீஷ், தொகுத்து வழங்கிய புலவர் கோவிந்தராஜ், தொழிலதிபர் பரந்தாமன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
    • நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது நிதிக் குழுவின் பணிகள் பற்றிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விதிகளால் புதுவைக்கு தேவையான நிதியை பெற முடியாது.

    புதுவை மாநிலமாக இல்லாவிட்டாலும் 16-வது நிதிக்குழுவில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், நிதித்துறை மந்திரியை சந்தித்து இதை வலியுறுத்தியிருந்தால் 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்பட்டிருக்கும்.

    இதை செய்ய தவறியதால் புதுவை மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரை யறைக்குள் செல்ல முடியாது. இதனால் மத்திய அரசின் வரி வருவாயில் புதுவைக்கு பங்கு கிடைக்காது.

    அரசியல் சட்ட விதி எண் 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி வழங்கப்படாது. உள்ளாட்சி அமைப்பு களுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, புனரமைப்பு மானியங்கள், கல்வி மானியம் மாநில சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி எதுவும் கிடைக்காது.

    இது புதுவைக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். புதுவை பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கப் போகிறது. இதற்கு முதல்-அமைச்சரும், கவர்னரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார்.
    • புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     புதுச்சேரி:

    புதுவை கலிதீர் தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையத்துடன் இணைந்து, கணினி அறிவியல் பொறியியல் பிரிவு வாரியம் கீழ் "இயந்திர கற்றல் கருத்துக்கள் மற்றும்பயன்பாடுகள்", என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தியது.

    பயிலரங்கில் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும்பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், தலைமையுரை ஆற்றினார்.

    புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் திருஞானம் வரவேற்பு ரையாற்றினார்.

    எம்.ஐ.டி. கல்லூரி இயந்திரவியல் துறை தலைவரும் புதுச்சேரி மாநில மையத்தின் கவுன்சில் உறுப்பினருமான ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார்.

    முடிவில் புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    ×