search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் தமிழிசை பங்கேற்பு
    • பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பிலான மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி பாகூர் அடுத்த சோரியங்குப்பம் கிராம பஞ்சாயத்தில் நடந்தது.

    அதில், சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு வேளாண் துறை, குடிமை பொருள் வழங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எரி வாயு மற்றும் வீடு கட்ட மானியம் பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கவர்னர் தமிழிசை சந்தித்தார்.

    • சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
    • பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வெறி நாய் மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலியார்பேட்டை, மூலக்குளம், அண்ணா சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் விரட்டி சென்று கடித்தன. இதைய டுத்து புதுவை நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரிந்த 38 நாய்களை பிடித்தனர்.

    இந்தநிலையில் சின்ன காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 50). இவர் புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலை க்கழகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்தார். பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    ஒரு கட்டத்தில் நாயை சமாளிக்க முடியாத முருகசாமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய போது அந்த நாய் அவரை விடாமல் விரட்டியது. ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடிய அவரை துரத்திச் சென்று நாய் கடித்து குதறியது. கீழே விழுந்த முருகசாமியை நாய் விடாமல் கடித்ததில் இடது கால், இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அங்கு பணியில் இருந்த சக காவலாளிகள் அவரை மீட்டு காலாப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட வரும் முருகசாமியின் வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருவ தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு கல்லூரி பேராசிரியர் தங்கதுரை(50)யை நாய் கடித்தது குறிப்பிடத் ததக்கது.

    • பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
    • கண்ணன் மறைவுக்கான இந்த கூட்டத்தில் பங்கேற்பது வேதனை தருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் சபாநாயகர், அமைச்சர், எம்.பி. கண்ணன் கடந்த 5-ந் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார்.

    அவருக்கு புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை 9 மணிக்கு ஓட்டல் சற்குருவில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமை வகித்தார்.

    தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கண்ணன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பேசினார். அவர் பேசியதாவது:-

    நம்மை நேசித்தவர்களை இழந்து அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பது போன்ற துரதிர்ஷ்டம் யாருக்கும் வரக் கூடாது. எனது அரை நூற்றாண்டு காலம் என்னால் அறியப்பட்ட கண்ணன் மறைவுக்கான இந்த கூட்டத்தில் பங்கேற்பது வேதனை தருகிறது.

    கண்ணன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே சென்றாலும், அவர் காங்கிரஸ்காரராகத்தான் இருந்தார். அவர் மறைவுக்கு பின் அவர் இருந்த இயக்கத்தினர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாம்தான் உறவை இழந்ததுபோல தவித்து, துடிக்கிறோம்.

    காங்கிரசின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இதை காங்கிரசும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பது ஆதங்கமாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகர், விஜயவேணி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கண்ணனின் மகன் விக்னேஷ் ஏற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜனதா கூட்டணி ஆட்சி உச்சகட்ட அதிகார மோதலில் சிக்கி தவிக்கிறது. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் நடைபெறும் விழாக்கள் குறித்து கவர்னருக்கு தெரி விக்க வேண்டும். அவரை அழைக்காமல் விழா நடத்தக்கூடாது என தலைமை செயலர் அனைத்து துறைக்கும் சுற்ற றிக்கை அனுப்பி யுள்ளார்.

    மக்களால் தேந்தெடுக்கப் பட்ட அரசின் செயல்பாடை முடக்கும் விதத்தில் கவர்னருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

    இது முதல்- அமைச்ச ருக்கு அவ மரியாதையை ஏற்படுத்துகிறது. தனக்கு தெரியாமல் தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பியதாக கவர்னர் கூறியுள்ளார்.

    எனவே தலைமை செயலர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும். புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    இதனால் அரசு துறை அதிகாரிகள் செயல்பட முடியாமல் அல்லல்படு கின்றனர். கவர்னரும், முதல்- அமைச்சரும் பேச்சு வார்த்தை மூலம் அரசை வழிநடத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி யுள்ளது.

    இதை புதுவையில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இலவச அரிசி வழங்கப்படும் என தெரி வித்தது. தற்போது கவர்னர் அரிசிக்கு பதில் பணம் வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறுகிறார்.

    புதுவை மக்களிடம் கவர்னர் மாளிகை எப்போது கருத்து கேட்பு நடத்தியது? கவர்னர் தெரிவிக்கும் அறிவுரைகள், கருத்துக்களை முதலில் அவர் பின்பற்றி நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
    • வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். 

    • தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும்.
    • விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதய தினம் இன்று காலை கொண்டாப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்தும் பா.ஜ.க.வில் சேர்த்து விடுகின்றனர். வேறு எல்லாவற்றையும் பாஜகவில் சேர்த்து விடுங்கள்.

    தமிழக போலீசை தி.மு.க. போலீஸ் என அழைக்கலாமா? அமலாக்கத்துறையில் ஒரு பிரச்சினை நடந்துள்ளது.

    ஒரு அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் வீட்டிலிருந்து கட்டி, கட்டியாக, பெட்டி, பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல அனைத்து தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.


    அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியுமா? எல்லா துறையிலும் பிரச்சினை இருக்கலாம், பிரச்சினைக்குரிய அதிகாரிகள் இருக்கலாம். ஒரு நபருக்காக துறையே மோசமானது, எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள், அது மத்திய அரசு அமைப்பு, நாங்கள் மாநில அரசு அமைப்பு எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம் என கூறலாமா?

    இந்த பிரச்சினையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது. தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர்.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தால் அவர் எந்த துறையாக இருந்தாலும் தவறுதான்.

    கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் ஒருவர் மீதும் கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    அங்கே சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அரசு மீது குறைகூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்சினை நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முத்திரை குத்த முடியாது. சுப்ரீம்கோர்ட்டு கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.

    புதுவையில் முதலமைச்சருடன் இணைந்து செயல்படுகிறேன். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை, அரவணைக்கும் பழக்கம்தான் உள்ளது. மருத்துவக்கல்வி விவகாரத்தில் கவர்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார்.

    நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? எந்த விவகாரத்துக்கும் கவர்னர்தான் காரணமா?

    வெறும் வாய்க்கு கவர்னர்தான் அவலா? எதிர்கட்சித்தலைவர் சிவா கவர்னரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • பாஸ்கர் எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதா வலியுறுத்தல்
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சாலை வழியே செல்லும் போது மிகவும் சிரமப்படுவதாக எடுத்து கூறினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் நகர் பொது மக்களுடன் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.பாஸ்கரை சந்தித்து பேசினார். அப்போது செங்கழுநீரம்மன் நகரில் மழையினால் சாலை கள் சேத மடைந்துள்ளது.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சாலை வழியே செல்லும் போது மிகவும் சிரமப்படுவதாக எடுத்து கூறினர்.

    இதையடுத்துபாஸ்கர் எம்.எல்.ஏ. உடனடியாக இளநிலை பொறியாளரை அழைத்து துரிதமாக அந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொய்வில்லாமல் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழைக்காலம் முடிந்தவுடன் அந்த சாலைகளை நிரந்தரமாக சரி செய்து கொடுப்பதாகவும் பாஸ்கர் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜனதா தொகுதி பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து மற்றும் முருகவேல் ஆகி யோர் உடனிருந்தனர்.

    • கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன்.
    • தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நாகாலாந்து உதயநாள் விழா நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த விழாவில் புதுவை பல்கலைக்கழகம், ஜிப்மரில் படிக்கும் நாகாலாந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களோடு இணைந்து கவர்னர் தமிழிசை நடனமாடினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தற்போது பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் தொகுதியில் நடக்கும் விழாவில் அவர்களை அழைக்க வேண்டும் என கூறுகின்றனர்.


     அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை என அரசியல் செய்யக்கூடாது. நிகழ்ச்சிக்கு அழைக்காத கலெக்டரிடம் கேள்வி கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?

    கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நான் புதுவையிலேயே உள்ளேன் என கூறுகிறார். அந்தளவுக்கு புதுவையின் மீது கவனம் செலுத்துகிறேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கிருமாம்பாக்கம் விநாயக மிஷன் செவிலியர் கல்லூரி 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் கவுரவ விருந்தினராக விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

    சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் காஞ்சனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் 55 பேருக்கும் முதுகலை மாணவர்கள் 18 பேருக்கும், போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் 17 பேருக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இளங்கலை படித்த 25 பேருக்கும் பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    விநாயக மிஷன் புதுச்சேரி வளாகத்தில் நிர்வாக தலைமை அதிகாரி டாக்டர் கோட்டூர், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் செகல், இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் கோரகுருவில்லா, மருத்துவக் கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா ரமேஷ் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
    • எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி, டிச.2-

    புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

    100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பல்வேறு விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. உலகளவில் சிறந்த இடத்தை புதுவை சுகாதாரதுறை பெற வேண்டும்.எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுவையில் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதற்கு தேவையான விழிப்புணர்வு, மருந்துகளை அரசு அளித்து வருகிறது. நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே நோய்கள் வருவதை தடுக்க சுகாதாரம், உள்ளாட்சி உட்பட அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச்சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்காலில் உள்ள 3 பரிசோதனை மையங்களை சார்ந்த ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை முதல் - அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சம்பத் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.
    • காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இருதயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகு திகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தி.மு.க. சார்பில் துணை அமைப் பாளரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைத்திருநாளை யொட்டி, காலண்டர் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார்.

    அப்போது தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், நிர் வாகிகள் ரவி, ஹரி கிருஷ்ணன், ராஜி, நோயல், நிசார், விநாயகமூர்த்தி, செல்வம், காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இரு தயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×