search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம்.
    • மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி கலந்துரையாடுதல் மற்றும் கானொளி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே சேலியமேடு கிராம பஞ்சாயத்தில் அரங்கனூர் சமூதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம். 'மோடி கேரண்டி வேன்' எல்லா கிராமங்களுக்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகிறது. பிரதமர் சொன்னது போன்று மூளை முடுக்குகளிலும் கூட மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. இது போன்ற பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் இன்னும் பல பயனாளிகளை கண்டறிவதற்கும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் "அம்மா இதற்கு முன்பு ஓலை வீட்டில் இருந்தேன். இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். அதற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தான் காரணம்" என்று கூறினார்.

    அதைப்போல இன்னும் தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் இது உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மழைக்கால காய்ச்சலை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவிலலை என்று குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் பேச வேண்டும்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் 30 சதவீதம் கமிஷன் வைக்கப்படுகிறது. ஊழல் மிகுந்த ஆட்சியாக இருக்கிறது. இதில் கவர்னருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும், இது சம்மந்தமாக ஜனாதிபதிக்கும் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனரே என்ற கேள்விக்கு, இது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    இதில் கவர்னருக்கு சம்மந்தம் இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டு சம்பந்தம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர்.

    அப்போது அந்த விடுதி படுக்கை அறையில் எலெக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காதல் ஜோடியினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் விடுதி அறையில் சோதனை செய்தபோது பல காதல் ஜோடிகள் தனிமையாக இருந்ததை வீடியோ எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார் மற்றும் விடுதி மேலாளர் இருதய ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தது விடுதி ஊழியர்களான தேங்காய் திட்டு வசந்தம் நகரை சேர்ந்த ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்து, ஆபிரகாம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் கோவாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமாதியில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
    • பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

    புதுவைக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளும் மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து லட்சுமி யானையிடம் ஆசி வாங்குவதை வழக்கமாக கொண்டிரு ந்தனர்.

    அதோடு லட்சுமி யானைக்கு வாழைப்பழம், அருக்கம்புல், போன்றவற்றை வழங்கி மகிழ்வார்கள், குழந்தைகளும் ஆவலோடு யானை மீது அமர்ந்து மகிழ்வார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் யானையின் வசிப்பிடமான ஈஸ்வரன் கோவில் வீதியிலிருந்து அதிகாலை நடை பயிற்சி சென்றபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மயங்கி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். யானையின் உடலுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இந்தியா முழுவதுமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யானை உடல் அடக்கம் செய்யும் வரை பொதுமக்கள் சோகமாகவே இருந்தனர். தொடர்ந்து யானை நினைவு இடத்தில் தினமும் பக்தர்கள் பால் ஊற்றி வணங்கி வந்தனர்.

    இந்த நிலையில் யானை லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றது. வனத்துறை அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை லட்சுமி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றி சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமானோர் யானை லட்சுமிக்கு பிடித்தமான ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா , வாழை போன்ற பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.
    • பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உயிர் மருத்துவத்துறை பயோ மெடிக்கல் சொசைட்டி சார்பில் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ கருவிகள் பயிற்சிப் பட்டறை நடந்தது.

    இதனை அதீனா பாண்டியன் பயோ மெடிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடத்தியது.

    இதில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தன சேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி. பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.

    உயிர் மருத்துவப் என்ஜினீயரிங் துறை தலைவர் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில் அதீனாபாண் டியன் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்று உயிர் மருத்துவப் பொறியியல் சார்ந்த பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகள் பற்றியும், அவற்றின் பயன்கள், பழுது நீக்குதல் பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர்.

    இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகாடமிக் டீன் அறிவழகர் நன்றி கூறினார்.

    • 7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார்.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான செஸ் போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள 36-வது தேசிய செஸ் போட்டி, டெல்லியில் 67-வது மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

    மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி ஹன்சிகாவுக்கு ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.

    • புதுவை கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிலையங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

    புதுவையிலும் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தோடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளது. இதற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் கம்ப்யூட்டர், சென்சாருடன் இணைந்த இடத்தில் வாகனங்களை ஓட்டி உரிமம் பெற வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல், சிறிய தவறு செய்தாலும் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

    புதுவையில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களும் இதன்கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

    இங்கு கனரக ஓட்டுநர்க ளுக்கு முழுமையான என்ஜின் வாகன பழுது பார்ப்பு பயிற்சியும் அளிக்கப்படும். விரைவில் இடத்தை தேர்வு செய்து ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையத்ததை நிறுவ போக்கு வரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது.

    • அமைச்சர் சாய்.ஜெ‌.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    • தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட பொறையூர் மற்றும் வள்ளுவன்பேட் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக பொதுமக்கள் வந்து செல்ல லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமையில் பொறையூர் சண்முகா சிட்டி பகுதிக்கு ரூ.28.61 லட்சம் மதிப்பீட்டிலும், சக்தி நகருக்கு தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.7.83 லட்சம் மதிப்பீட்டிலும், கற்பக விநாயகர் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்க ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டிலும் பூமி பூஜையை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் கருத்தாயன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் அய்யனார், காளியப்பன், ராமு, பரமசிவம், தணிகைவேல், அந்தோணி, கிளை தலைவர் பிரியன், ஊடக பிரிவு பொறுப்பாளர் சதீஷ்குமார், சாலை பொறுப்பாளர் கருணாகரன் உள்பட ஊசுடு தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கம்பன் கலையரங்கில் நடந்தது
    • மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திண்டிவனம் கம்பன் கழகம் அறக்கட்டளை சார்பில் அமுதவிழா காணும் வேரை விழுதுகள் வணங்கும் விழா இன்று காலை புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிக்கு பாராட்டு மடல் மற்றும் நினைவு பரிசு வழங்கி ஆசி ெபற்றார்.

    விழாவில் முன்னாள் சபாநாயகரும் புதுவை கம்பன் கழக தலைவருமான வி.பி. சிவக்கொழுந்து மற்றும் எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். மயிலம் ஸ்ரீமத் சிவன்யான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஞானஜோதி சரவணன் நோக்க உரையாற்றினார்.

    விழாவில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தேசிய விருதாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து உரை வழங்கி மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் மகா சந்நிதானம் சிவஞான பாலய சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினரான ஆதிகேசவன், முத்து, முருகசாமி, வேல்முருகன், வேணுகோபால், நெய்தல் நாடன், துரை.ராசமாணிக்கம், கோவிந்தராசு, ரமணன், பாலசுப்பிரமணியன், சீனு மோகன்தாஸ், திருநாவுக்கரசு, ஞான ஜோதி, வேல்கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • செல்வகணபதி எம்.பி.பேச்சு
    • அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மோகன்குமார் விளக்க உரையாற்றினார். முன்னதாக புதுவை மாநிலத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்த பட்டியல் அணியின் நிர்வா கிகள் அறிமுகப்ப டுத்தப்பட்டனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி கலந்து கொண்டு அம்பேத்க ரின் நினைவு தினத்தை சிறப்பாக நடத்துவது குறித்து பேசி னார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தலைமை அழைத்த உடனேயே மழை யும் பொருட்படுத்தாமல் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருப்பது கட்சியின் மீது பட்டியல் அணியினர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

    புதுவை பட்டியல் இன மக்களும் பா.ஜனதா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் பட்டியல் அணி எந்த அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடைபெற உள்ள அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி ஊர்வலத்தில் பட்டியல் அணி சார்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும்.

    பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு பிரதமர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் புதுவை மாநிலத்தைச் சார்ந்த பட்டியல் இன மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா பட்டியல் அணி நிர்வாகிகள் பிரதமரின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். எதிர்வரும் வரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்களை நிர்ண யிக்கக்கூடிய அளவிலே பட்டியல் அணி நிர்வாகிக ளின் வளர்ச்சி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணியன், ராஜேஸ்வரி பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம், மாவட்ட தலைவர்கள் வெற்றிவேல், ராஜகுரு அம்பேத்கர், விண்ணரசன் மற்றும் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
    • வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

    உதவி பேராசிரியரும் நோடல் அலுவலருமான பாரதி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா தலைமை உரையாற்றினார்.

    பாகூர் தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு வாக்காளர் பதிவு அதிகாரி வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார் . முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவிகளின், கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    முகாம் நிறைவில் துணை முதல்வர் மஞ்சுளா நன்றி கூறினார்.

    • அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவுறுத்தல்
    • ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி சுல்தான்பேட்டையில் உள்ள ராஜா நகர் விரிவாக்கம் முதல் 3 ஸ்டார் நகர் உள்பட 17 நகர் வழியாக தெப்லான் வாய்க்கால் ஜி.என்.பாளையம் செல்கிறது.

    தெப்லான் வாய்க்காலை தூர்வாரி மழை நீர் தேங்காமல் செல்வதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேடுதூக்கி சாலை அமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து தரவும் அந்த பகுதி பொதுமக்கள், ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்ய நாராயணன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் பொருட்டு தெப்லான் வாய்க்கால் மீது இருக்கும் ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், முஜிபாய், ஹாஜி, ரபீக், ராஜா முகமது, சிராஜி, சுல்தான், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுள்ளா, அயலக அணி துணை அமைப்பாளர் பக்ரூதீன், ஹாலித், கார்த்திகேயன், முரளி உடன் இருந்தனர்.

    ×