search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
    • ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுக்குட் பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் தாழ்வாக சாலை இருந்ததால் தற்போது பெய்த மழையால் சாலை உள்வாங்கி மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இப்பணியை கென்னடி

    எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியின் போது நகராட்சி உதவி பொறி யாளர் யுவராஜ், ஒப்பந்ததாரர் பிராங்க்ளின், ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்குட்பட்ட மணவெளி மந்தை பகுதி அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த அறிவியல் கண்காட்சியின் போது 1-ம் வகுப்பு முதல் 5ம்- வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைவர் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவ -மாணவியர்கள் காட்சிக்கு வைத்திருந்தவற்றை பார்வையிட்டு அது குறித்து மாணவர்கள் கூறிய விளக்கங்களை கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறையின் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் பள்ளிகளின் வட்ட ஆய்வாளர் லிங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா வரவேற்றார்.

    • காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
    • சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.

    இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.

    ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.

    புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
    • 15 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

    ரெட்டியார்பாளையம் பகுதியில் இருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்ற அந்த நாய், பொதுமக்களை கடித்து குதறியது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 15 பேரை அந்த நாய் கடித்துள்ளது.

    காயமடைந்த அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 15 பேரைவெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து வரும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் தகுதியான சான்றிதழ் பெறப்பட்டு பள்ளியின் மூலமாக ஆதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு நலத்துறை விசாரித்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 2023- 24 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்து நலத்துறை மூலமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. அதே வேளை யில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து நேற்று பல்வேறு பள்ளிகளில் ஆதிதிராவிடர் மாணவர்கள் அழைத்து கல்வி உதவித்தொகை பெற நாளை 30-ந்தேதிக்குள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளில் 2 நாட்களுக்குள் எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று புலம்புகின்றனர்.

    சான்றிதழ்கள் பெறுவதற்காக வருவாய் அலுவலகங்களில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது:- முன்பெல்லாம் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பத்தை பள்ளியிலேயே புதுப்பித்து கொள்வோம். இப்போது மாணவர்கள் அனைவருமே ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதுவும் 3 நாட்களில் சான்றிதழ்கள் பெற்று எப்படி விண்ணப்பிப்பது? அதிதிராவிடர் நலத்துறை தொடர்ந்து எங்களை அலை கழித்து வருகிறது. உடனடியாக இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய முறையை பின்பற்ற வேண்டும். அல்லது இறுதி தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு
    • புதுவையில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்திரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை காப்பாற்றி யவர்களுக்கு புதுவை மக்கள், காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்கள். பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு உரிய நிவார ணம், அனைத்து சுகாதார வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும்.

    இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சீனாவிலிருந்து பரவும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுவாசத்தை பாதிக்கும் நோய் பரவுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை யில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும். புதுவையில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு இதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது.

    சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் இதுவரை எந்த மருத்துவமனையையும் ஆய்வு செய்யவில்லை. முதல்-அமைச்சர் நேரடியாக மருத்துவமனை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். மதுக்கடைகளை திறந்து பாவத்தை சேர்க்கும் முதல்-அமைச்சர் மருத்துவ மனையில் சுகாதார பணிகளை மேற்கொண்டு புண்ணியத்தை தேட வேண்டும்.

    மானியம் பெற்றவர்கள் பால்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கி றார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டு மானியம் பெற்றவர்கள் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். புதுவையில் குழந்தைகளுக்கு பால் பற்றாக்குறை நிலவு கிறது. ஆனால் மது தட்டுப் பாடின்றி கிடைக்கிறது.

    புதுவை மின்துறை, கல்வித்துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த துறைகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. மின்துறையை தனியாருக்கு அரசு விற்றுவிட்டதாக கருதும் வகையில் தனியார் மூலம் பணிகள் நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கல்வித்துறையில் ஓய்வுபெற்றவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களை பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். புதுவையில் ஆயிரக்க ணக்கானவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கின்றனர். இவர்களை நியமிக்க அமைச்சர் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்த அமைச்சர் புதுவைக்கு தேவையா? என மக்கள் சிந்திக்கின்றனர். தனது நிலைப்பாடை அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் அவரை பணி செய்ய முடுக்கிவிட வேண்டும். புதுவை மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல கஞ்சா போன்ற போதைப்பொரு ட்கள் பழக்கம் பரவியுள்ளது. இளைஞர்கள் இந்த பழக்கத்தால் சீரழிந்து வரு கின்றனர். ஆட்சியா ளர்களின் ஆதரவா ளர்க ள்தான் போதை ப்பொருட்களை 99 சதவீதம் விற்பனை செய்கின்றனர். அமைச்சர், காவல்துறை இரண்டும் செயல்பட வில்லை. அமைச்சர் செயல்பாடு மக்களுக்கு உதவிகரமாக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
    • இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.

    புதுச்சேரி:

    மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.

    அதன்படி சின்னவீராம்பட்டினம் பகுதி களவு கண்ட முத்து மாரியம்மன் ஆலயம், ஓடைவெளி பகுதி சுந்தரவிநாயகர் பிரம்படி மாரியம்மன் ஆலயம், தவளக்குப்பம் பெருமாள் ஆலயம், மாரியம்மன் கோவில் ஆகியவற்றிற்கு திருப்பணி உதவித் தொகையாக ரூ.4.75 லட்சம் மற்றும் நானமேடு சிவசுப்பிரமணியர் கோவில், தவளக்குப்பம் ஸ்ரீ மாரியம்மன் பெருமாள்கோவில், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், சின்ன வீராம்பட்டினம் களவு கண்ட முத்து மாரியம்மன் கோவில், ஸ்ரீ பிச்சாவரம் கோவில், இடையார்பாளை யம் ஸ்ரீ பிரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில், நோனாங்குப்பம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், நல்லவாடு ஸ்ரீ மாரியம்மன் கோவில்,

    ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில், அபிஷேகப்பாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், ஆண்டியார் பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆகிய 13 கோவில்களுக்கு பூஜைக்கா தலா ரூ.2.60 லட்சம் என மொத்தம் ரூ.7.35 லட்சத்திரத்திற்கான காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    • 30-ந் தேதி நாளை காலை அனைத்து சாமிகளுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனையும் செய்து, மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது.
    • அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து 108 நெய் தேங்காய் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20-ம் ஆண்டு மகோற்ச்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. அதனை முன்னிட்டு கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, அய்யப்பன், பெரிய கருப்பண்ணசாமி, சிறிய கருப்பண்ணசாமி, கருப்பாயி அம்மன் ஆகிய சாமிகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தி காலை 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர்

    எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 30-ந் தேதி நாளை காலை அனைத்து சாமிகளுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனையும் செய்து, மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது.

    வருகின்ற 1 -ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் அய்யப்பன் சாமி விசேஷ அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 2 -ந்தேதி காலை 7 மணிஅளவில் நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் அய்யப்பன் சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து 108 நெய் தேங்காய் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் அய்யப்பன் சாமி மூலவருக்கு பால் அபிஷேகமும் நெய் அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் திருக்கோவில் அறங்காவல் குழுவினர், அய்யப்ப சேவா சங்கம் மற்றும் அய்யப்பன் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • குரங்கு கூட்டம் சுற்றி வருகிறது.
    • பழங்கள், உணவுப்பொருட்களை எடுத்துச்சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஒரு குரங்கு கூட்டம் சுற்றி வருகிறது.இது அங்குள்ள மரங்களில் உள்ள பழங்களை சாப்பிட்டுவிட்டு சுற்றிவரும்.

    இந்த குரங்குகள் கடந்த 10 நாட்களாக வாணரப்பேட்டை பகுதிக்குள் நுழைந்தது. இந்த குரங்குகள் அலைன்வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச்செல்கிறது. இன்று காலையிலும் வீடுகளுக்குள் புகுந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள், உணவுப்பொருட்களை எடுத்துச்சென்றுள்ளது.

    இந்த குரங்குகள் 3 அடிஉயரத்தில் இருப்பதால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லவே அஞ்சுகின்றனர். சிலஇடங்களில் குரங்ககுள் உணவுப்பொருட்களை எடுப்பதோடு, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்துகிறது.

    இதனால் இந்த குரங்குகளை பிடித்து வேறு இடத்துக்கு அனுப்ப வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    • சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் பெருக்கத்தை தடுக்க செய்யும் கருத்தடை பணிகள் முடங்கி உள்ளன. இது நாய்கள் பெருக்கத்துக்கு ஓர் முக்கியக்காரணம்.

    புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சாலையில் நடந்து சென்றோர், வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

    ரெட்டியார்பா ளையத்திலிருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்றது மேலும் 8 பேரை கடித்தது. இதில் மொத்தமாக 15 பேர் காயமடைந்து  நாய்கடி தடுப்பூசி போட்டனர்.

    இந்த நிலையில் இன்றுகாலை புதுவை நகராட்சி அமைந்துள்ள கம்பன் கலையரங்கம் அருகே நாய் ஒன்று பலரை விரட்டி கடித்துள்ளது. இதில் 6 பேர் வரை காயம் அடைந்தனர். அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 9 பேரை நாய் கடித்துள்ளது.

    காலை நாய் கடித்த 15 பேர் புதுவை அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்டு சென்றனர். இதனால் சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • கூட்டுறவு கல்வியில் கல்லூரி தொடங்கப்பட்டது
    • முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2005ம் ஆண்டு கூட்டுறவு கல்வியில் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த கூட்டுறவு கல்லூரி கடந்த நவம்பர் 5ந் தேதி ஆசிரியர் தின தின விழாவில் அரசு கல்லூரியாக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்கான பெயர் பலகையை கவர்னர் தமிழிசை மற்றும் முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். கூட்டுறவு கல்வியில் கல்லூரியாக இருந்தபோது மாணவர்களுக்கு ரூ 51 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.ஆனால் அரசு கல்லூரியாக மாறிய பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 51 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் இன்று சுதேசி பஞ்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2-ம் ஆண்டு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது குறித்து மாணவர்கள் கூறும்போது, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் ரூ.5 ஆயிரம் கட்டணமே 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது.
    • இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    நீட் அல்லாத முதுகலை படிப்புகளான எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, எல்.எல்.பி, எல்.எல்.எம். மற்றும் சட்டம் சார்ந்த பட்டயபடிப்புகளுக்கு மாப்அப் கலந்தாய்வு  புதன்கிழமையும், நாளையும் நடக்கிறது.

    புதுவை சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது. இன்று நடந்த கலந்தாய்வில் தகுதியான மாணவர்கள் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். காலியிட விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    ×