search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரி யார் நகரில், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி யின் குழந்தைகள் தின விழா, முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

    பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினர். டாக்டர் ரங்க நாயகி வளவன், ஜிப்மர் இதயவியல் துறை டாக்டர் இளவரசி சங்கர் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    டாக்டர் ரத்தின வசந்தன், பல் மருத்துவர் நீனா வசந்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேச தலைவர்கள் போன்று குழந்தைகள் மாறுவேடமிட்டு கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலை யர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட் சுமி,சோனியா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல்
    • தேர்தல் துறை அதிகாரிகள் குழு ஆய்வு

    புதுச்சேரி:

    புதுச்சேரி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை புதுச்சேரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான வல்லவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக படிவங்கள் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறதா, 18 வயதான புதிய வாக்காளர்கள் எத்தனை படிவங்கள் வந்துள்ளது என உள்ளிட்ட விவரங்களில் வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது துணை கலெக்டர் வினைகுமார், வாக்காளர் பதிவு அதிகாரி சந்திரகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதைப்போல தேர்தல் பார்வையாளர் மற்றும் செயலர் முத்தம்மா, தாசில்தார் கோபால கிருஷ்ணன், துணை தாசில்தார் விமலன் ஆகியோர் தனிக்குழுவாக ஆய்வு செய்தனர்.

    • மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைக்கு வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை செயலர் சுதான்ஷ் பந்த் முதல்-அமைச்சர் ரங்க சாமியை சந்தித்து பேசிய தோடு 2023-24-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு காலதாமதமாக சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    அதுபோல் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 830 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையையும் உறுதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசு சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் மனு
    • இதுவரை சரியான பாதை வசதி இல்லை

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் வாணரப்பேட்டை பகுதி மக்கள் சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் வாணரப்பேட்டை, தாவீதுபேட்டை, பெரிய வாய்க்கால் ஓரத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடு களுக்கு வாணரப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து சென்று வர இதுவரை சரியான பாதை வசதி இல்லை. அவரவர் வீடுகளுக்கு எதிரே உள்ள சுமார் 3 அடி அகலம் உள்ள பாதையில் மட்டும் சென்று வருகின்றனர்.

    அந்த பாதையில் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத சூழல் உள்ளது. பெரிய வாய்க்காலை அரசு புனரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு அகலமான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று பார்வையிட்டு உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    • பட்டதாரி மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா.
    • வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. தக்ஷஷீலா பல்கலைக்கழ கத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக் குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி கல்லூரியின் வடிவமைப்பு முதுகலை படிப்பின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினர்.

    கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் வரவேற்றார். தேர்வு கட்டுபாட்டா ளர் ஜெயக்குமார் முதுகலை பட்டப்படிப்பில் எதிர்கால தேவைக்கான பாடபுத்தகங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். ஆராய்ச்சி மற் றும் மேம்பட்டு துறை யின் டீன் வேல்முருகன் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது பற்றி கூறினார்.

    கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் முத்து லட்சுமி முதுகலை பட்டம் படிப்பிற்கு இக்கல்லூரி சிறந்த கட்டமைப்பு உடையது என்று கூறினார். கணினி முதுகலை துறை தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • புதுவை கோர்ட்டில் தீர்ப்பு
    • வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 34 வயது பெண்ணின் செல்போனுக்கு 23.9.2022ல் அழைப்புகள் வந்தது.

    அதில் பேசியவர் முகநூலில் செல்போன் எண் கிடைத்ததாக கூறி ஆபாசமாக பேசினார். தினமும் அழைப்புகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் முகநூல் வழியாக சென்று பார்த்த போது, அவரையும், அவர் சகோதரியையும் 8 போட்டோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபாசமாக போட்டோக்களை அனுப்பி யது அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்த முருகன் (வயது.37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார். அரசு தரப்பில் வக்கீல் கணேஷ்ஞான சம்பந்தன் ஆஜரானார்.

    சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன், மனைவி, குழந்தையுடன் வந்து, செய்த தவறுக்கு கண்ணீர் மல்க நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.

    முருகன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில், குற்றவாளிகள் நன்னடத்தை கால சட்டம் பிரிவு 4-ன்கீழ் எந்த தவறுக ளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை யுடன், அவர் மன்னித்து விடு விக்கப்பட்டார். மீண்டும் இதே போல தவறு செய்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

    • வெடி குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் .

    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாப்பட்டு சுனாமி குடியி ருப்பைச் சேர்ந்த சுகன் என்கிற பிரதீப். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி வெடி குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சுகன் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் படாகம் பகுதி யில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் .

    சிறையிலிருந்து வெளியே வந்த சுகன் சமீபத்தில் காலப்பட்டுக்கு வந்தார். இங்கு சுகன் ரவுடிக ளுடன் சேர்ந்து பல்வேறு அசம்பா வித சம்பவங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் சுகனை காலாப்பட்டு போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைய தடை விதித்து சப்- இன்ஸ்பெக்டர் குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் சுகனுக்கு ஊருக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    • ஓட்டல் நடத்தி வரும் லட்சுமியிடம் இடத்தின் உரிமையாளர் சந்திரசேகர் அதிகப்படியான வாடகை கேட்டதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மணவெளி தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வர் குணசேகரன். இவர் புதுவை பொதுப்பணித் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா என்ற லட்சுமி (வயது 39), புதுவை- விழுப்புரம் சாலையில் தனியார் கம்பெனி அருகே சந்திரசேகர் என்பவ ருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.

    கடந்த 2018-ம்ஆண்டு முதல் ஓட்டல் நடத்தி வரும் லட்சுமியிடம் இடத்தின் உரிமையாளர் சந்திரசேகர் அதிகப்படியான வாடகை கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பி ட்ட வாட கையை கொடுக்க வில்லை யென்றால் ஓட்டலை காலி செய்யு ங்கள் என கூறியதாக தெரிகிறது.

    சம்ப வ த்தன்று சந்திர சேகர் அவரது மகன் பால சேவகன் இரு வரும் ஓட்டலை காலி செய்யக்கோரி லட்சுமியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் ஆரோவில் கடற்கரை பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த என்.சி.சி. மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    என்.சி.சி. ஜூனியர் கமிஷன் ஆபீஸர் சீனிவாசலு தலைமையில் நடந்த தூய்மை பணியில் கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வீசி சென்ற சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். பொம்மையார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் உதவியுடன் டிராக்டர் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது.

    இந்தத் தூய்மைப் பணியில் பொம்மையர் பாளையம் கவுன்சிலர் விஜயலட்சுமி நாகராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலு, என்.சி.சி. ஏ.என்.ஓ. சகாயமேரி, சமூக சேவகர்கள் அப்துல் சமத், கோவிந்தன் மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.
    • அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட அவ்வைநகர் மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் புதிய சாலை அமைத்து கொடுக்கும் படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.

    அப்போது அப்பகுதி மக்கள் திருமூலர் வீதிக்கு பெயர் பலகையும், வாய்க் கால் கட்டை அமைத்து கொடுத்து கொடுக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை ஏற்ற கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரியிடம் பேசி இப்பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு, அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மத்திய சுகாதாரத்துறை செயலர் பங்கேற்பு
    • விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் திட்டங்க ளையும் அதன் பயன்பாட்டை யும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், ''நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மணவெளி தொகுதி ஓடை வெளி கிராமத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசு சுகாதாரத்துறை செயலர் சுதன்ஷ் பண்ட் பங்கேற்றார். மாவட்ட கலெக்டர் வல்லவன் முன்னிலை வகித்தார்.

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், நோடல் அதிகாரி ராதாக்கிருஷ்ணன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்த விளக்க கூடிய வாகனம் நிறுத்தப்பட்டு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

    இதில், மத்திய அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தேசிய அளவில் பல

    துறைகளில் வெற்றி பெற்ற வீரர்கள் கவுரவிக்கப்பட்ட னர். ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிறை பெற்ற குடிநீர் திட்டத்தின் சான்றிதழ் அந்தந்த கிராமத்தின் கிராம குடிநீர் சுகாதார குழுவிற்கு வழங்கப்பட்டது.

    இதேபோல், அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் கிராமத்தில் நடந்த நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், நேருயுவ கேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    ×