search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
    • போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே பொது போக்குவரத்துக்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது.

    வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர். கட்டணத்தை முறைப்படுத்த மீட்டர் பொருத்தினால் மட்டுமே எப்.சி. சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் ஒடும் பெரும்பாலான ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் மீட்டரை இயக்குவதில்லை. ஆட்டோக்களுக்கு கட்டணமும் 2016-ல் நிர்ணயித்திருந்தனர். கடந்த 8 ஆண்டாக இந்த கட்டணம் நடைமுறைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் போக்குவரத்து துறைக்கு ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து போக்குவரத்து துறை, மீட்டர் கட்டணத்தை வசூலிக்காத, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்த எச்சரிக்கை இன்றும் பெரும் பாலான ஆட்டோ க்களில் பின்பற்றப் பட வில்லை. வாடிக்கை யாளர்களிடம் பேசிய கட்டணம் வசூலித்தனர். போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன் கூறியதாவது:-

    ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பல முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஆட்டோக்கள் வரி, உதிரிபாகங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தும் போது ஆட்டோ தொழிற்சங்க ங்களை அழைத்து பேசி கட்டணம் நிர்ணயம் செய்கி ன்றனர். ஆனால் புதுவையில் திடீரென 8 ஆண்டுக்கு முன்பு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கி ன்றனர்.

    அதற்கு பதிலாக ஆட்டோ தொழிற்சங்கங்களை அழைத்து பேசி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் பொதுசெயலாளர் சேது செல்வம் கூறியதாவது:-

    7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி இப்பொழுது உள்ளதா? குறிப்பாக பெட்ரோல், இன்சூரன்ஸ், எப்.சி. கட்டணம், சாலை வரி, ஆட்டோ உதிரி பாகங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    அது மட்டுமின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அண்டை மாநிலங்களில் அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யும்போது ஆட்டோ தொழிற்சங்க த்தோடு கலந்து பேசி மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆண்டுதோறும் ஆட்டோ எப்.சி. எடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்குகிறது.

    பல்வேறு மாநிலங்களில் அங்குள்ள அரசுகள் கியாஸ் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த உண்மைகளை உணர்ந்து போக்குவரத்து துறை செயல்படுமானால்

    ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தினந்தோறும் வாகன ஓட்டிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் ஊர்ந்தே செல்கின்றன.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதில் மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் சாலை விரிவாக்க பணிக்கு முன்பு சாலை ஓரங்களில் பஸ்கள் செல்லும் சாலை ஓரத்திலேயே நடைபாதை வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர்.

    தற்பொழுது 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் சாலை ஓரங்களில் இருந்த அனைத்து கடைகளும் மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த வழியாகவே பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிப்டிக் தொழிற்பேட்டைக்கு செல்லும் பெண்கள் -ஆண்கள் என அனைவரும் 2 சக்கர வாகனம் 4 சக்கர வாகனங்களில் சென்று வர வேண்டும்.

    தற்பொழுது இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் ஊர்ந்தே செல்கின்றன.

    இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்தும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் திருபுவனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் அது தங்கள் வேலை அல்ல? போக்குவரத்து போலீசாரின் வேலை என்று தட்டிக்கழிக்கின்றனர்.

    இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இருபுறங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி சீரான போக்குவரத்து நடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.
    • நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில், மருந்தியல் கல்லுாரி சார்பில், 62-ம் ஆண்டு மருந்தியல் வார விழா தொடங்கியது.

    தொடக்க விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    அறக்கட்டளை துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறை டீன் தனலட்சுமி வரவேற்று, குத்து விளக்கேற்றினார்.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

    விழாவையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    நாளை உளுந்துார்பேட்டையில் மருத்துவ முகாம் நடக்கிறது. துணைப்பேராசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

    • உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை குருசுகுப்பம் பத்மினி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செயின்ட்டு அந்துவான். இவரது மனைவி மரிகிளேர். இவர் அரவிந்தர் ஆசிரம் நூலகத்தில் வேலை செய்து வருகிறார். மகன் அதல்பர் வயது 27) இவர் அதே பகுதியில் உள்ள அத்தை வீட்டில் வசித்து வந்தார்.

    அவ்வப்போது அதல்பர் தனது தாயை சந்தித்து நலன் விசாரித்து செல்வார்.

    அதுபோல் சம்பவத்தன்று இரவு அதல்பர் தனது தாயை சந்திக்க வந்தார். அப்போது மரிகிளேர் வேலைக்கு எதுவும் செல்லா மல் ஊர் சுற்றி வருகிறாயே என அதல்பரை கண்டித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அதல்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை எடுத்து தின்று விட்டார்.

    இதில் உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் பலனின்றி நேற்று இரவு அதல்பர் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து மரிகிளேர் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட சோரப்பட்டு கிராம மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த கிராம நிர்வாக அலுவல கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் (தெற்கு) கலெக்டர் மகாதேவன், வில்லியனூர் துணை தாசில்தார் சேகர், பொதுப் பணித்துறை சிறப்பு கட்டிட கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் சண்முகம், கிராம நிர்வாக அதிகாரி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதர வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்
    • இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை நியூ பெத்தாங் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட அமித்தே பெத்தாங் விளையாட்டு கிளப் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி கடந்த 5-ந் தேதி உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் தொடங்கி நடந்தது.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது. கிளப் கவுரவத் தலைவர் முகிலன் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், வக்கீல் தாமோதரன், ஷண்முகா திரையரங்க உரிமையாளர் சுரேஷ், முத்தமிழ் நகர் ராஜா, இளங்கோ, சரவணன், மதனா, மாதவி கபாலன், கொல்மார் ரவிச்சந்திரன், சீனுவாசன், ரஜினீஷ் மற்றும் கிளப் நிர்வாகிகள் ரகு, பாஸ்கர் ஜான்சன், உதயசந்திரன், அருள், அரிவு டைநம்பி, அசோக்குமார், வேதக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை கேம்பயர் நிகழ்ச்சியில் நடனம், நாடகம், இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • பள்ளித் தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம். அருள்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் 2 நாள் சாரண- சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 44 சாரணிகளும், 38 சாரணர்களும் மற்றும் 6 சாரண ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    முதல் நாள் சாரணர்கள் ஹைகிங் என்ற நடைபயண நிகழ்வாக புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து நரம்பை வரை கடலோர நடைப்பயணம் மேற்கொண்டனர்.

    பிறகு கடற்கரையின் பகுதிகளை சுத்தம் செய்தனர். மாலை கேம்பயர் நிகழ்ச்சியில் நடனம், நாடகம், இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    2-ம் நாள் காலை 5 மணிக்கு உடற்பயிற்சிகள், சர்வசமய பிராத்தனை, கொடி அணிவகுப்பு போன்ற செயல்பாடுகளைச் சிறப்பாக செய்தனர்.

    நிறைவு விழாவின் போது புதுச்சேரி மாநில சாரண-சாரணியர் இயக்க மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சாரண இயக்கத்தின் நோக்கத்தையும் அதன் முக்கித்துவத்தையும் எடுத்துக்கூறினார்.

    பள்ளித் தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம். அருள்செல்வி வாழ்த்துரை வழங்கினார். சாரண ஆசிரியர் முத்துபாபு மற்றும் இளவரசி பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு செய்தனர். வெற்றி பெற்ற சாரணர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் விவசாயிகள் மனு
    • கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை, இ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இதுகுறித்து ஏற்கனவே செப்டம்பரிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஆதிமூலம், கண்ணன், ஜெயகோபி, ராமமூர்த்தி, நாராயணன், ஜீவானந்தம், ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார்.
    • 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனை சூனாம்பேடு சுகாதார மையத்தில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட தேவாலயத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மருத்துவமனையின் மருத்துவ துறை மற்றும் பிம்ஸ் சுகாதார மையம் இணைந்து இலவச மருத்துவ முகாமினை

    நடத்தியது. முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். அருட் தந்தை ஜோபி ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.ஊர் துணை தலைவர் தெய்வசிகாமணி, மற்றும் பழனி, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முகாமில் மருத்துவர்கள் பீட்டர் பிரசாந்த், அச்சு ஜார்ஜ், ஹெனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர். 97பேருக்கு சர்க்கரை பரிசோதனை மற்றும் 8 பேருக்கு கர்ப்ப பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 47 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    • ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது.
    • நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 9.01.2014-ல் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் தனது போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் சோலைநகரை சேர்ந்த சாரங்கபாணி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரியில் போலியான ஆவணங்கள் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு முதல்முறையாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 4-ம் கால யாக பூஜை இன்று நடந்தது
    • 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

    20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
    • ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதியில் ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்வ தற்கான பூமிபூஜை விழா இன்று நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சேதராப்பட்டில் ரூ.13 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி, தொண்ட மாநத்தம் கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி உட்பட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத் தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊசுடு தொகுதியில் நல்ல குடிநீர் வழங்கு வதற்காக ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான, சுத்தமான நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அண்ணா சாலையில் ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம் படுத்த அரசு அதிக அக்கறை செலுத்தி செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ரசாயான தொழிற்சாலை விபத்து குறித்து கேள்வி எழுப்பி னர். அதற்கு பதில் அளிக்காமல் ரங்கசாமி அங்கிருந்து சென்றார்.

    ×