search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கலால்துறை எச்சரிக்கை
    • வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கலால்துறை துணை ஆணையர் மேத்யூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மது விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்களது விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபரிமாற அனு மதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடிப்படை வசதிகளை சரிவர பராமரிக்காத ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்ட ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அடிப்படை வசதி களை சரி வர பராம ரிக்காத மற்றும் சில்லறை வியா பாரத்தில் ஈடுபடும் ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டா ரண்டுகள் மீது புதுவை கலால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
    • பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற ஆசிரியர் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். படித்த இளைஞர்கள் பலர் இருக்க ஒய்வு பெற்றோருக்கு வாய்ப்பு அளிப்பதா.? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஓய்வுபெற்ற ஆசிரி யர்களை நியமிப்பதற்கு எதிரான விமர்சனங்கள் உண்மைகளை அறியாமல் எழுப்பப்படுகின்றன. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல்வேறு ஆசிரியர் பணியி டங்களை நிரப்ப நிதித் துறை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    எனவே பணியிடங்களை நிரப்ப 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பிப்ரவரி மாதத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும்.

    ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதால், தற்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் அதிக சுமையால், தினமும் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்று பாடத்திட்டத்தை முடிக்க வேண்டியுள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, இடைக்கால ஏற்பாட்டிற்குப் பிறகு அவர்களது சேவை நிறுத்தப்படும். சுமார் 340 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 67 விரிவுரையாளர்களை பணியமர்த்த கோப்பு விரைவில் வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியி டங்களையும் காலக் கெடுவு டன் நிரப்புவோம். ஒரே பிரச்சனை என்னவென்றால், ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நேரம். ஆட்சேர்ப்பு விதிகளைப் பின்பற்றி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் இது வெளிப்படை த்தன்மையு டன் செய்யப்பட வேண்டும்.

    அநேகமாக இந்த கல்வி யாண்டின் இறுதிக்குள், பெரும்பாலான காலியி டங்கள் நிரப்பப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை காலி இடத்தில் நியமிப்பதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வயது முதிர்ந்த பட்டதாரிகளை நியமித்தால் 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு அத்தகைய பட்டதா ரிகளின் சேவை களை நிறுத்துவது பணி நியமனத்துக்கு தடைகளை உரு வாக்கும். ஓய்வு பெற்ற ஆசிரி யர்க ளின நியமனம் மற்றும் பணி நீக்கத்தை நிர்வ கிப்பது எங்களுக்கு எளிதானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.
    • பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி, மூடிக்கிடக்கும் அரசு நிறுவனங்கள் திறக்கப்படும். நலிவடைந் துள்ள பொதுத் துறை நிறுவனங்களை சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.

    ஆனால் இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சுதேசி , பாரதி, ஏ.எப்.டி. பஞ்சாலைகள், கூட்டுறவுசர்க்கரை ஆலையை மூடியுள்ளனர். இதை தொடர்ந்து இப்போது பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி அரசு தொழிலாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இதை ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும். ஜனநாயக வழியில் ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வழக்கறிஞர் சசிபாலன் தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளரிடம் மனு
    • நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெளியூர் மற்றும் பல ஊர்களுக்கு செல்ல பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    ஆனால் அங்கு நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர். சில பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது சரியாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே இதனை உடனடியாக சரி செய்து தரக்கோரி வழக்கறிஞரும் சமூக சேவகருமான சசிபாலன் தலைமையில் சமூக அமைப்பு நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    அப்போது கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    உழவர்கரை தொகுதியில் மூலக்குளம் அரும்பார்த்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட நிழற்குடைகளை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார்
    • 6 புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பம், அரசியல் சர்வதேச ஆய்வுகள், உடற்கல்வி, விளையாட்டு, வரலாறு, ஆங்கிலம், கணிணி அறிவியல் துறைகளுக்கு 6 புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் சுபாஷ் சந்திரபோஸ் ஆண்கள் விடுதி, கண்ணகி பெண்கள் விடுதி, பிர்சா முண்டா ஆண்கள் விடுதி என 3 விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.

    இந்த 9 கட்டிடங்களையும் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார். விழாவில் பேராசி ரியர்கள் தரணிக்கரசு, ராஜீவ்ஜெயின், ரஜ்னீஷ்பூடானி, லாசர், சதானந்தஜிசுவாமி, விஜயகுமார், நந்தகிஷோர், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
    • விழிப்புணர்வு வாகன யாத்திரை நல்லவாடு மீனவ கிராம பகுதியில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங் குப்பம் கொம் யூன் பஞ்சாயத்து சார்பில் மணவெளி தொகுதியில் மத்திய அரசின் திட்டங் களை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கருப்பொருளை உள்ளடக்கிய விழிப்புணர்வு வாகன யாத்திரை நல்லவாடு மீனவ கிராம பகுதியில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார். இந்த விழிப்புணர்வு வாகன யாத்திரையில் மத் திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட 17 கிராமப்புற மக்களுக்கான திட்டங்களையும், நகர்ப்புற மக்களுக்கான திட்டங் களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்பட்டது.

    பின்னர் திட்டங்களில் பயன டைந்த சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சபா நாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கினார். தொடர்ந்து பொது மக் களுக்கான மருத்துவ முகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அதி காரிகள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஊசுடு தொகுதிக் குட்பட்ட கோனேரிக்குப்பம், உளவாய்க்கால் மற்றும் அகரம் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தி மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் நிதி உதவியுடன் ரூ. 4. 7 கோடி மதிப்பில் அதற்கான பூமி பூஜை கோனேரிகுப்பத்தில் நடந்தது.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை யில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டுமான பணியை பெயர் பலகையை திறந்து வைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    இதனுடன் நீர் உந்து மோட்டார் பொருத்தப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் இறவை செய்யும் வகையில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குடிநீரில் இரும்பு தாதுக்களை நீக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகளும் நடக்க உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் உளவாய்க்கால், கோனேரிக்குப்பம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறு வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், ஜல்ஜீவன் திட்ட இயக்குனர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர் உட்கோட்ட உதவி பொறியாளர் பீனா ராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, ஜல்ஜீவன் திட்ட ஒருங்கிணைப் பாளர் பால முருகன், இள நிலைய பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், கோனேரிகுப்பம் தாமோதரன், அகரம் கணேசன், ஆனந்தபாஸ்கர், உளவாய்க்கால் கலையரசன், முத்தையன், முருகவேல் மற்றும் தொகுதி குடிநீர் பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • சிறுபாலங்கள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 3 ஆயிரத்து 759 மீ நீளமுள்ள நடைபாதை, வடிகால் வாய்க்கால் மேம்பாடு, ஆம்பூர் சாலையில் சேதமடைந்துள்ள சிறுபாலங்கள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி ரூ.9 கோடியே 14 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உருளையன்பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் சீனு திருஞானம், உதவிப்பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • உருளையன்பேட்டை தி.மு.க. தீர்மானம்
    • சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி மற்றும் கிளை தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீடாராஜப்பர் வீதியில் உள்ள தென்றல் அரங்கில் நடந்தது.

    தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல் வரவேற்றார். அவை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி அமைப்பா ளர் மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தகர் அணித் தலைவர் செல்வ முத்து குமார விநாயகம் , அமைப்பு சாரா ஓட்டுநர் அணித் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாநில துணை அமைப்பாளர்அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளரும், தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் செய்திருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உருளையன்பேட்டையில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக கட்டிக் கொடுக்க போதிய நிதியை வருகின்ற நிதி ஆண்டில் ஒதுக்கி, புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கவும் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நட வடிக்கையை மேற்கொள்ள அரசை வலியுறுத்துவது.

    ராஜா நகரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

    உப்பனாறு மேம்பால கட்டுமான பணியை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அண்ணா திடலை சுற்றி அமைந்துள்ள குபேர் பஜார் மற்றும் நேரு பஜார் கடைகளை 3 ஆண்டாக கட்டி ஒப்படைக்காத அரசின் மெத்தன போக்கு மற்றும் செயலற்ற தன்மையால் வியாபாரிகளை அல்லல்பட வைத்துள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

    என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. கூட்டத்தில், தொகுதி துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஷ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    முடிவில் தொகுதி பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

    புதுவை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளி பிழம்பாய், சிவன் காட்சி யளித்த நாள் கார்த்திகை பவுர்ணமியாகும்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் தீபம் ஏற்றி வைப்பதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு கார்த்திகை தீபம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அகல் விளக்கு செய்யும் பணி புதுவையில் தீவிரமாக நடக்கிறது. முருங்கபாக்கம், திருக்காஞ்சி, பிள்ளையார்குப்பம் பகுதியில் அகல்விளக்கு செய்யும் பணிகளில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர புது வகையான விளக்குகளை தயாரிப்பர். இந்த ஆண்டு 9 வண்ண ங்களில் 20 வகையான விளக்குகளை கைவினை கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். 5 முகலட்சுமி, விநாயகர், யானை, அலாவுதீன், ராந்தல், தாமரை, நட்சத்திரம், துளசி மாடம் போன்ற வடிவங்க ளிலும் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விளக்குகள் புதுவை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விளக்குகள் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக் குட்பட்ட அப்துல்கலாம் அரசு குடியிருப்பு பகுதியை புனரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூஜை செய்து பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித் துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் செயற்பொறி யாளர் திருஞானம், உதவிப்பொறி யாளர் பார்த்தசாரதி இள நிலைப் பொறியாளர் ஜெய சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ராகேஷ், பாலாஜி, மோரிஸ், பஸ்கல், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
    • போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.

    இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

    இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.

    பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×