search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு
    • பிரச்சினைகளுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பர். இந்த மீன்களை துறைமுகத்தில் இறங்கு தளத்தில் வைத்து விற்பனை செய்வர். வைத்திக்குப்பம், குருசு குப்பம், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவ பெண்கள் வாங்கி விற்பனைக்கு கொண்டுசெல்வர்.

    நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் நடந்த தகராறு எதிரொலியாக இன்று யாரும் மீன் வாங்க வரவில்லை.

    இதனால் ஆவேசமடைந்த விசைப்படகு உரிமை யாளர்கள் மரப்பாலம் சந்திப்பில் கொட்டும் மழையில் திடீரென காலை 11.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் மலையாளத்தான் தலைமை வகித்தார். பிரச்சினைகளுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை இழுத்துச்சென்று கைது செய்தனர். 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பைபர் படகு உரிமை யாளர்கள் சங்கத்தினர் தங்களுக்கு டீசல் மானியம் வழங்கவில்லை என புகார் கூறி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்தமாதம் முதல் டீசல் மானியம் வழங்கப்படும் என்றும், துறைமுகத்திலேயே டீசல் விற்பனை நிலையம் செயல்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கட்டிட ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் மகாதேவன் பாகூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் துணை தாசில்தார் விமலன் செயற் பொறியாளர் சீனு திருஞானம் உதவி பொறியாளர் பாவாடை மற்றும் மணப்பட்டு காட்டுக்குப்பம், கன்னிய கோவில், வார்கால்ஓடை, புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. மனு
    • நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர்? அவர்களின் சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட 400 டன் உற்பத்தியை விட அதிகமாக 650 டன் வரை உற்பத்தி செய்ததே விபத்துக்கு காரணம்.

    ஆபத்தான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் தலைகவசங்களை வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் இதை கண்காணிக்கவில்லை.வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தகளை இங்கு தயாரித்துள்ளனர்.

    இதன் மூலப்பொருட்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    இதை தட்டிக்கேட்டவர்கள் கூலிப்படையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு 10 சதவீத உள்ளூர் தொழிலாளர்களுக்குகூட வேலை வழங்கவில்லை.

    நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் பலர் பலவித நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள பாய்லர்கள் வெடித்தால் பெரும் விபத்து ஏற்படும். காலாப்பட்டு பகுதி கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவர்.தற்போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை தொழிலாளர் உட்பட 2 பேர் இறந்துள்ளனர்.

    எனவே நிறுவனத்தின் உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும். மருந்து நிறுவனம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்பகுதியில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    • சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை.
    • அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை இண்டியா கூட்டணி சார்பாக கட்சி தலைவர்கள் கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும்,எதிர்கட்சி தலைவர்சிவா எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம்,துணை செயலாளர் சேதுசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு லெனிஸிட்டு கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சோ.பாலசுப்பரமணியன், மார்க்சிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள்,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி,பிரபுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:

    புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை. தொடர்ந்து அரசு குழப்பமாக செயல்பட்டு நடப்பாண்டு மோசடியும், ஊழலும் நடந்துள்ளது. சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தும் அரசு பொறுப்பான பதில் தரவில்லை. மருத்துவ கவுன்சில் உத்தரவு களைக்கூட மதிக்கவில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான உச்சநீதிமன்ற உத்தரவும் மதிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.இதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இதை மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சா ரமும் செய்யவுள்ளோம்.

    நாடுமுழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை இயல்பாக நடக்கும்போது ஆண்டுதோறும் புதுவையில் மட்டும் குழப்பம் நிலவுகிறது. உரிய இடங்களைக்கூட கேட்டு பெறவில்லை. முழுமையாக நீதிபதி தலைமை யில் விசாரிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரபரப்பு தகவல்
    • பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருந்து கம்பெனியை விரிவாக்கம் செய்ய கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 8.5.2018-ல் தேதியில் அனுமதி கொடுத்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது.

    இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மனு அளிக்க உள்ளேன். புதுவை கலால்துறையில் சாராயக்கடை, பெட்ரோல், டீசல் பங்க் நடத்திய முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் ரூ.200 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். இதை வசூலிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    28-ந் தேதி நடக்கிறது

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் வருகிற 28-ந் தேதி மாநில தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது.

    புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது

    போராட்ட முன் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஏ.ஐ. டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஏ.ஐ. டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.ஏ.ஐ. டி.யு.சி. சார்பில் தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் துரை செல்வம், தயாளன் விவசாய சங்கத்தின் சார்பில் டிபி.ரவி, ராமமூர்த்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பால கிருஷ்ணன், ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் பெரும் திரளாக தொழிலாளர் களையும், விவசாயிகளையும் பங்கேற்க செய்வது என்றும் ஊர்வலத்தின் நோக்கத்தை விளக்கி 25-ந் தேதி காலையில் பாகூர் பகுதியில் தெருமுனை கூட்டமும், அன்று மாலை 4 மணிக்கு சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் தெருமுனை கூட்டமும், தொடர்ந்து 27-ந் தேதி திங்கட்கிழமை காலை முதலியார் பேட்டை வானொலி திடலில் தெரு முனை கூட்டமும் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

    • நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    சுசி கம்யூனிஸ்ட் மடுகரை கிளை சார்பில் மந்தைவெளி திடலில் நெட்டப்பாக்கம் தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மடுகரை கிளை செயலாளர் ஜமாலுதீன் தலைமை வகித்தார். ஆனந்தன் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாநில செயலாளர் லெனின்துரை தொடங்கி வைத்தார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மடுகரை பட்டாம்பாக்கம் சாலைபயில் கோழிக்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். சிறு வந்தாடு மெயின் ரோட்டில் பெரிய வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு
    • புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அம்பேத்கரிய, பெரியாரிய பொதுவுடமை இயக்கங்கள் சார்பில் சிறப்பு மாநாடு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் முன்னிலை வகித்தனர். எதிர்கட்சித்தலைவர் சிவா சிறப்புரையாற்றினார்.

    மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய கல்விகொள்கை, விஷ்வ கர்மயோஜனா திட்டங்களை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    மேலும், கோரிக்கைகளை டிசம்பர் 4-ந் தேதி பாராளுமன்றம் எதிரே பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்துடன் மனு சமர்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு 50 சதவீத மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு அறித்த இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மாணவர் சேர்க்கையில் வெளிப் படைத் தன்மை இல்லை. மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. ஆதிதிராவிட மக்களுக்கு ஆளும் அரசு எந்த திட்டங்களையும் செயல் படுத்தாமல் மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் தலித், பழங்குடி யின இயக்கங் களின் கூட்டமைப்பு, தலித் அமைப்புகளின் கூட்ட மைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. மனு
    • இதுவரை தீ விபத்துக்கு காரணமான வர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பெரியகாலாப்பட்டில் உள்ள மருந்து தொழிற்சாலை விபத்தில் 15 பேர் 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 2 தொழிலாளர்கள் மரண மடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த உண்மைகளை மறைக்கிறது.

    நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசும், போலீஸ் அதிகாரி களும் மவுனம் காக்கிறார் களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும், தொழிற்சாலை யின் சட்டவிரோத செயலுக்கு மறைமுகமாக அரசு ஆதரவளிப்பது போல் தெரிகிறது.

    விபத்து ஏற்பட்டவுடன் காலாபட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தீ விபத்துக்கு காரணமான வர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. காலாப்பட்டு போலீசார் நடவடிக்கை குறித்து விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மனித இழப்பு மற்றும் காயமடைந்த நபர்களை பற்றி அரசோ, நிர்வாகமோ கவலைப்படவில்லை. 16 வயது சிறுவன் எப்படி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டான் .? என்பது தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அப்போது மாநில துணை தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் நாகமணி ஜெயசேரன், காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மின்துறை எச்சரிக்கை
    • இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி, கயிறு, ஆடு, மாடு, வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளை களை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

    மழைக் காலத்தில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள், மரங்கள் அருகே நிற்கக்கூடாது.

    மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், தொடாமல் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    மின்சாதனங்களின் வயர்களை இணைப்பில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகளை தொடக்கூடாது.

    கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்ற, இறக்கக்கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

    தீயணைப்பு துறைக்கு தகவல் தர வேண்டும். வீட்டில் சுவர்களில் மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்கந்தரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்ச்சை அணைத்து விடவும். மின் விபத்துகள் ஏற்பட்டால் 1800 4251 912 என்ற கட்டணமில்லா தொலை ழ்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
    • முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

    புதுச்சேரி,

    வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா. இவர் வில்லியனூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் முகமது நவாஸ் (வயது18). இவர் கோபாலன் கடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை தனது தங்கையை அழைத்துக் கொண்டு அங்குள்ள பள்ளியில் விட்டு விட்டு முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

    ஜான் பாஷா தனது மனைவியுடன் விழுப்பு ரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஜான் பாஷா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் முகமது நவாஸ் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய மகனை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது நவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜான் பாஷா வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னுடைய மகன் கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் அவரிடம் அவரது நண்பர்கள் யாரோ பிரச்சினை செய்ததால் மனக்கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் முகமது நவாஸ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்துள்ளார்.
    • ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆன்லைன் லோன் அப் மூலம் ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார்.

    அந்த தொகையை வட்டியுடன் ரூ.14 ஆயிரமாக திருப்பி செலுத்தினார். அவரை மர்மநபர் இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு ஹரிகரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, மேலும் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    பண்டசோழநல்லூரை சேர்ந்த மங்கையர்கரசியிடம் மர்ம ஆசாமி ஒருவர் வங்கி அதிகாரிபோல் பேசி ரகசிய எண்ணை (ஓ.டி.பி.) பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்துள்ளார்.

    லாஸ்பேட்டை, பெத்து செட்டிபேட்டை சதீஷ் என்பவரிடம் அவரது உறவினர் பேசுவதுபோல் மர்மநபர் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக பெற்று மோசடி செய்துள்ளார்.

    புதுப்பேட்டை ராஜராஜன் என்பவரிடம் பாஸ்டாக் அதிகாரிபோல் பேசி, ரூ.8 ஆயிரம் மோசடி நடந்துள்ளது. ஆரோவில் ஜோதிர்மயி பொம்மோனா தனது தந்தைக்கு கூரியர் மூலம் லேப்டாப் அனுப்பியுள்ளார்.

    கூரியர் அதிகாரிபோல் ஒருநபர் அவரிடம் பேசி, அப்பொருளை பெற ரூ.10 ஐ வங்கிக் கணக்கில் இருந்து செலுத்துமாறு கூறி ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். அதை நம்பி ஜோதிர்மயி அப்பணத்தை அனுப்பிய நிலையில், அடுத்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    தவளகுப்பத்தில் வசிக்கும் அரிகரனிடம், பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதன்மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி டெலிகிராமில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதன்படி ஆன்லைனில் சிறிய தொகையை முதலீடு பணியை தொடங்கியுள்ளார்.

    பின்னர் மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.3.75 லட்சத்தை முதலீடு செய்த பிறகு எந்த வருமானமும் வரவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடிய வில்லை.

    கோவிந்த சாலையை சேர்ந்த கவியிடம் பிட்காயின் முதலீடு ஆசைகாட்டியும், பிரசாத் என்பவரிடம் ஓ.டி.பி. பெற்றும் பணம் மோசடி நடந்துள்ளது.

    இதுதவிர அரும்பார்த்தபுரம் செந்தில்குமார், ரூ.2 ஆயிரத்துக்கு உலர்பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை இழந்துள்ளார். இதுதவிர திவ்யா என்ற இளம்பெண்ணிடம் பாஸ்டாக் அதிகாரிபோல் பேசி ரூ.8 ஆயிரத்தை மர்ம ஆசாமி நூதனமாக ஏமாற்றி பறித்துள்ளார்.

    மொத்தம் 4 பெண்கள் உட்பட 10 பேரிடம் நூதனமாக நடந்த ரூ.5.06 லட்சம் மோசடிகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி, கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×