search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஐ.என்.டி.யூ.சி. பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் முத்துராமன், ஜான்சன், ராயர் ஆன்டனிராஜ், விஜயராகவன், முத்தால், பி.டி.டி.சி. ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதியில் பி.டி.டி.சி. நீர் விளையாட்டு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐ.என்.டி.யூ.சி. பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கி சங்க கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    காங்கிரஸ் மாநில துணை தலைவரும் முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி. துணை தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் முத்துராமன், ஜான்சன், ராயர் ஆன்டனிராஜ், விஜயராகவன், முத்தால், பி.டி.டி.சி. ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
    • வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை போலீசார் ஜெயமூர்த்தி ராஜாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை கருமார வீதியை சேர்ந்த அசோக் குமார் வயது 22 என்பது தெரியவந்தது.

    • கவுசிக பாலசுப்பிரமணியர், தெய்வானை, வள்ளியை மணமுடிக்க மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளினார்.
    • முத்தியால் பேட்டை சிவ சுப்ரமணிய சாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகர்கோ வில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள பிரசித்திபெற்ற கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 71-ம் ஆண்டு சூரசம்ஹார திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    தொடர்ந்து 16-ந் தேதி காலை யானை முகன் சூரன் புறப்பாடும், அன்றிரவு யானை முகன் சம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை திருத்தேர் உற்சவமும் அதனை தொடர்ந்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

    இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கவுசிக பாலசுப்பிரமணியர், தெய்வானை, வள்ளியை மணமுடிக்க மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து நலுங்கு, ஊஞ்சல், மாப்பிள்ளை அழைப்பு ஆகியவை நடைபெற்று திருக்கல்யாணம் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பெண்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆலய பரிபாலகர் கவுஸ்காதர், ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார் மற்றும் விழாகுழுவினர் செய்தனர்.

    இதுபோல் புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற லாஸ்பேட்டை, முத்தியால் பேட்டை சிவ சுப்ரமணிய சாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகர்கோ வில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    • ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.
    • மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரிய தர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பள்ளி கல்வி நேரடி துறை, 2023-24ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவதற்கு அல்லது மண்டல நேரடி ஆள்சேர்ப்பு மூலம் பணியி டங்கள் நிரப்பப்ப படும் வரை இதில் எது முந் தையதோ அதுவரை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.

    இந்த பணிக்கு விண்ணப்பிப் போர் 1.7.2023 தேதியின்படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியமனத்தின்போது, அவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 22 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியில் ஈடுப டுத்தப்படுவார்கள். ஆர்வ முள்ளவர்கள் மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

    நேர்காணல் நடைபெறும் தேதி முறையே மண்டல அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அசல் ஆர்டர்கள். சான்றிதழ்க ளுடன், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் தகுதி சான்றி தழ்க சான்றொப்ப மிடப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும். நேர்காணல் கலந்துகொள்ள பயணப்படி இல்லை. காரணங்கள் எதுவும் கூறாமல் தேர்வு செயல்முறையை ஒத்தி வைக்க அல்லது ரத்து செய்ய கல்வித்துறைக்கு உரிமை உள்ளது.

    புதுவையில் வாழ்க்கை அறிவியல் - 16, உடல் அறிவியல் - 23, சமூக அறிவியல் - 41 என 80 ஆசிரியர்கள், காரைக்காலில் கணிதம் - 10, வாழ்க்கை அறிவியல் - 13, உடல் அறிவியல் - 14. சமூக அறிவியல் - 24, பிரெஞ்சு - 1 என 62 ஆசிரியர்கள், மாகியில் கணிதம் -4, வாழ்க்கை அறிவியல்-2, சமூக அறிவியல்-5, பிரெஞ்சு - 1 என 12 ஆசிரியர்கள் என மொத்தம் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்க ளுக்கு தகு தியு ள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். புதுவையில் பள்ளி கல்வி இயக்குநரகம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டுகல்விவளாகம், அண்ணா நகர் புதுச்சேரி - 60.5005 என்ற முகவரியி லும், காரைக்காலில்துணை இயக் குனர் (மேல்நிலை கல்வி). தலத்தெரு, காரைக்கால் என்ற முகவரி யிலும், மாகியில் மண்டல அலுவலர் அலுவலகத்திலும் நேர்க் காணல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 25ந் தேதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேர்காணல் மூலம் 77 விரிவுரையாளர் பணியிடங் களை ஓய்வு பெற்ற ஆசிரி யர்களை கொண்டு நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலி பர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப மீண்டும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பி.எட் முடித்து ஆசிரியர் தகுதி தேர் வில்தேர்ச்சி பெற்ற பட்டதா ரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சுற்றுலாத்துறை ஏற்பாடு
    • புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது,

    புதுச்சேரி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.

    இதன் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டியை பொதுமக்கள் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது, இந்த திரையில் நண்பகல் முதல் போட்டியின் முடிவு வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பு தொடங்கியது.

    வெயிலை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் போட்டியை காண குவிய தொடங்கினர்.நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதேபோல் புதுவை எல்லைப்புறங்களில் உள்ள மதுபார்களிலும் திறந்த வெளியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர்புறங்களில் பெரிய தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • ஏர்ஹாரன் சத்தத்தால் பைக் ஓட்டிகள் அவதி
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், மதகடிப்பட்டு, பாகூர், வில்லியனூர், வீராம்பட்டினம், கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடங்களில் அதிகளவு டிக்கெட் கலெக்ஷனுக்காக பயணி களை முந்தியடித்துக் கொண்டு ஏற்றிசெல்ல தனியார் பஸ்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. பயணிகளை பஸ்களில் ஏற்றி செல்வதில் டைமிங் தகராறும் ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்தில் பல மணி நேரம் காத்து இருந்து விட்டு புறப்படும் நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வரும் தனியார் பஸ்கள் ஓயாது ஏர்ஹாரன்களை ஒலித்தப்படி வருகின்றனர். தனியார் பஸ்கள் புறவழிச்சாலை மட்டுமின்றி நகரப்பகுதி யிலேயே அதிவேகத்தில் செல்கின்றனர்.

    அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் ஏர்ஹாரனை அதிக சத்தத்தில் ஒலித்தப்படி செல்கிறது.திடீரென இந்த சத்தத்தை கேட்டு ரோட்டில் செல்லும் பைக் ஓட்டிகள், நடந்து செல்லும் பொது மக்கள் நடுங்கி அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. புதுச்சேரி பஸ்நிலை யத்திலும் இதே நிலைமைத்தான் நீடிக்கிறது.

    குறிப்பாக புதுவை- கடலூர் சாைலயில் ரோடியர்மில் ரெயில்வே கேட்டில் ரெயில் வருவதற்குள் முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து ஏர்ஹாரனை ஒலித்தப் படியே அதிவேகமாக வருகின்றனர்.

    இந்த திடீர் ஏர்ஹாரன் சத்தத்தால் பஸ்சிற்கு காத்தி ருக்கும் பயணிகள் அலறியடித்து ஓடிச்செல்லும் நிலைமை ஏற்படுகிறது. அவ்வப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தனியார் பஸ்களில் ஏர்ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தாலும் தொடர்ந்து புதுவையில் இந்நிலை நீடிக்கிறது.

    மேலும் இளைஞர்களும் பைக்கில் சாலையில் செல்பவர்களை மிரண்டு செல்லும் வகையில் விதவிதமான ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

    • இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, வக்கீல் மருதுபாண்டியன், ஆர்.இ. சேகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படாமல் வாய்க்கால்கள் மூலமாக கடலில் வீணாக கலக்கிறது.
    • நிலத்தடி நீர்மட்டம் சேமிக்கப்படாமலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் இருந்து வருகிறது.

    இந்த விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக 24 ஏரிகள் இருந்தது. ஆனால் தற்போது பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு 21 ஏரியை மட்டுமே பராமரித்து வருகிறது. மற்ற ஏரிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இதில் மணப்பட்டு தாங்கள் ஏரியும் இருந்து வருகிறது.

    இந்த ஏரிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கும் மழை நீர், தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலமாக பாகூர் சித்தேரி என்ற ஏரிக்கும் அதிலிருந்து நிரம்பி மணப்பட்டு ஏரிக்கு வந்து சேமிக்கப்படும்.ஆனால் இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் ஆகாயத்தாமரைகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்தும், மதகுகள் சேதம் அடைந்து தண்ணீர் தேங்க முடியாதபடி வழிந்து வருகிறது. 2 நாட்கள் மழை பெய்தாலே மணப்பட்டு ஏரி நிரம்பி தண்ணீர் வழிய தொடங்கும். இந்த ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படாமல் வாய்க்கால்கள் மூலமாக கடலில் வீணாக கலக்கிறது.

    இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் பொதுப்பணித்துறை இதை கண்டு கொள்ளாமலேயே உள்ளது. ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்தது.

    மேலும் ஏரியின் மதகு உடையும் தருவாயில் இருக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் விவசாய நிலங்களில் இருந்து வடியும் தண்ணீர் மணப்பட்டு தாங்கல் ஏரியில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறி கடலில் கலக்கிறது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் சேமிக்கப்படாமலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யா மாரியாப்பனார்-சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு ஐம்பெரும் விழா புதுவை ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அறக்கட்டை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரையாற்றினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சபாநாயகம், சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    மேலும் சாதனையாளர்களான பரந்தூர் புலவர் ராமசாமி, சேலம் கல்லூரி பேராசிரியர் அனிதா பரமசிவம், அருட்தந்தை அந்தோனி அடிகளார், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருஞானம், புதுவை வரலாற்று அறிஞர் முருகேசன், பழங்குடியினர் கூட்டமைப்பு ராம்குமார், பட்டிமன்ற நடுவர் கலக்கல் காங்கேயன், உருளையன் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, காராத்தே சுந்தரராஜன், புலவர் உசேன், திரைப்பட இசையமைப்பாளர் ஷாஜகான் உள்பட 15 பேருக்கு சாதனையாளர் விருதுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    விழாவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், புதுவை தமிழ்சங்கதலைவர் முத்து, செயலாளர் சீனு.மோகதாஸ், உசேன், பாடாகர் ஆதிராமன், திரைபட இயக்குனர் பேராசிரியர் முருகவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.

    • 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    • பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், வக்கீலுமான ராம் முனுசாமி தனது பிறந்த நாளை காந்தி வீதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார்.

    ராம் முனுசாமிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரியங்கா, செந்தில் குமார், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், எஸ்.பி.சிவக்குமார், அரசு செயலர் நெடுஞ்செழியன், முதல்-அமைச்சரின் தனிச்செயலர் அமுதன், டாக்டர் ராஜேஷ் குமார், வக்கீல் சிவகணபதி மற்றும் தொழிலதிபர்கள் ஜெகதீசன், அம்பல வாணன், கணேஷ், கனகராஜ், சக்தி கணபதி, ரத்தினவேலு செட்டியார், கே.ஜி.சங்கர், கருணாகரன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மேலும் 500 பெண்களுக்கு புடவைகள், 500 பேருக்கு தலா ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள முதியோர் இல்லங்களில் வசித்து வருவோ ருக்கும் உணவு அளிக்கப் பட்டது.

    • பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
    • ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்தனர்.

    புதுவையை சேர்ந்த பெண் இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து குறைந்த விலையில் உலர் பழங்கள் (டிரை ப்ரூட்ஸ்) கிடைக்கிறது என்பதை நம்பி ரூ.18 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்து கடந்த 15 நாட்களாக பொருள் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

    உங்களுடைய கிரெடிட் கார்டின் கடன் வாங்கும் தொகையை அதிகரித்து தருகிறோம் என்று பேசி வந்த எண்ணுக்கு ஓ.டி.பி.யை சொன்னவுடன் கிரெடிட் கார்டில் ரூ.27 ஆயிரம் பொருளை இணை மோசடிக்காரர்கள் வாங்கி அவரை ஏமாற்றி உள்ளனர்.

    மற்றொருவர் மார்க்கெட் மதிப்பில் ரூ. 4 லட்சம் விலை உடைய ஹைட்ராலிக் லிப்டிங் மிஷினை ரூ.1 3/4 லட்சத்துக்கு தருகிறோம் என்று இணையவழியில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி 10 நாட்களாக பொருள் மற்றும் எந்த தகவலும் இல்லை என்று புகார் அளித்துள்ளார்.

    புதுவையைச் சேர்ந்த 2 பேர் இணைய வழியில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு வங்கி கணக்கில் ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த புகார் சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது பற்றி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    செல்போனில் வரும் இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு ரூ.100 ரூ.500 செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது. அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு புகார்
    • சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை உட்பட்ட பிரதான சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    அதேபோல் தொகுதியின் உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்பு, கட்டிட குப்பை கழிவுகள், வாய்க்காலில் தேங்கும் சேறு, சகதிகளை அகற்றாமல் இருப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கெடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள்.

    இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் புதுவை நகராட்சி அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    ×