search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும்
    • பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இந்த மாட்டு சந்தையையொட்டி காய்கறி, வேளாண் இடுபொருட்கள், மாடுக ளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கருவாடு வகைகள் என பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    இங்கு விற்கப்படும் பொருட்களை புதுவை பகுதியில் இருந்தும், தமிழகப் பகுதியில் இருந்தும் அதிக அளவில் பொது மக்கள் வாங்கி செல்வார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை மதகடிப்பட்டு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள். இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று நடை பெற்ற மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கு முற்றிலுமாக வரவில்லை. மேலும் கடைகளும் அப்ப குதியில் அமைக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • நேற்று இரவு 8 மணி முதல் பிற்பகல் வரை அடை மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று பிற்பகல் வரை அடை மழை பெய்து வருகிறது.

    இந்த அடைமழை மழையால் பொதுப்பணித்துறை கணக்கின்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விளை நிலங்களிலும் வாய்க்கால்க ளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சித்தேரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாய்க்கால்கள் உடைந்து அதில் வரும் தண்ணீர் நிலத்தில் புகுஅந்துள்ளது. இதனால் நெற்பயிர்கள் மூழ்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

    இந்த தொடர் மழையின் காரணமாக கடலூர்-பாண்டி ரோட்டில் தண்ணீர் தேங்கி ஓடை போல காட்சிய ளிக்கிறது.

    வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் புதியதாக போடப்பட்ட சாலை சேதம டைந்து பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடலூர்-புதுச்சேரி ரோட்டிற்கு அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் புகாதவாறு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர் முறையாக ரோட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால் ரோட்டில் முழுக்க இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி காணப்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    இந்த தொடர் மழையால் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளது. பாகூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு குறுக்கே விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போதுமான வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தா ததால் விளைநிலத்தில் தண்ணீர் தேங்கி காணப்படு கிறது. இதனால் பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்தும் இருக்கிறது.

    இந்த மழையின் காரண மாகவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பாகூருக்கு ஏரிக்கு பங்காரு வாய்க்கால் வழியாக வேகமாக வந்து கொண்டு உள்ளது. தற்பொழுது பாகூர் ஏரி 2.80 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    பாகூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் அளவில் புதிய நடவு நெற்பயிரில் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயி கள் கவலை அடைந்துள்ள னர். கன்னியாகோவில் பகுதியில் அமைந்துள்ள மணப்பட்டு தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடந்த சில தினங்க ளாக வழிந்த நிலையில் தற்பொழுது ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

    • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    • சென்னையில் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    37-வது தேசிய சீனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னையில் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    போட்டியில் பங்கேற்கும் புதுவை ஹாக்கி அணியினர் அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆசி பெற்றனர்.

    வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார். நிகழ்ச்சியின் போது புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், அசோசியேட் செயலாளர்கள் பழனி, செந்தில்குமார், இணை செயலாளர் அரவிந்தன், பயிற்சியாளர் தயாளன் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்கள் உடன் இருந்தனர்.

    • புதுவையில் மழை பாதிப்புகளை முதல் அமைச்சர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் மழை பாதிப்புகளை முதல் அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    கிழக்கு கடற்கரை சாலை, மடுவூபேட், சாமி பிள்ளை தோட்டம், ரெயின்போ நகர்,பவழ நகர், வாழைக்குளம் ஆகிய பகுதி களில் ஆய்வு செய்தனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

    புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லை.நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருதால் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியவில்லை.

    புதுவை மற்றும் உழவர்ரை நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான இடங்களில் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பிரம்மன் சிலை சதுக்கம் அருகில் நடைபெற்றது
    • கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

    கொட்டும் மழையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மீனவர் அணி காங்கேயன், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, பி.சி.சி.திருநாவுக்கரசு, மகளிர் அணி பொன்னி சுப்புராயன், அரியாங்குப்பம் தொகுதி மகளிர் காங்கிரஸ் மகேஸ்வரி, அன்னலட்சுமி, தேங்காய்திட்டு முருகன், மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட தொகுதி, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவ மழை மற்றும் அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு துரிதமாக செயல்பட வேண்டும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

     இது ஏதோ வழக்கமான சம்பிரதாய கூட்டமாக அமைந்துள்ளதாகவே கருத வேண்டி உள்ளது. இந்த கூட்டத்தினால் மழையினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

    வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் உப்பனார் வாய்க்கால் மற்றும் செஞ்சி சாலை வாய்க்கால், சின்ன வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை நீக்கி மழை நீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு நாள் மழை வெள்ளத்துக்கு புதுவை மாநிலம் வெள்ளக் காடாக மாறியது புதுவை அரசின் செயலற்ற தன்மையை தெளிவாக காட்டுகின்றது. இதில் புதுவை மாநிலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ளது என்றும் அதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்பது புதுவை மக்களை ஏமாற்றும் திட்டம் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.

    எனவே புதுவை அரசு இனியும் காலம் கடத்தாமல் கடும் மழையை எதிர்கொள்ள அனைத்து இடங்களிலும் தூர்வாரி வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர், சுகுமாரன், செயலாளர். டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜரா ஜன், கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகி யோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமின் இறுதி நாளில் டெங்கு காய்ச்சல் விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவ அதிகாரி முகந்தி, நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பேரணி கரிய மாணிக்கம் உழவர் உதவி யகத்தில் தொடங்கி, நெட்டப்பாக்கம் சிவன் கோவில் திடலில் முடிவ டைந்தது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிறை வாக பண்ட சோழநல்லூர் கிராமத்தி லுள்ள அரசு நடு நிலை பள்ளி வளாகத்தில் பூந்தோட்டம் அமைத்துத்த ரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோதாவரி ஆற்றின் கரையில் புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    புதுச்சேரி:

    ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளையாகிய கவுதமி கோதாவரி ஆற்றின் கரையில் புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் உள்ளது.

    ஏனாமில், மனமகிழ் மன்றம் பெயரில் 20-க்கும் மேற்பட்ட சூதாட்ட விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல மன்றங்கள் அரசின் அனுமதியின்றி இயங்குவதாக அரசியல் கட்சிகள் புகார் கூறின. இதனால் அனுமதி பெறாத மன்றங்கள் மூட அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே அனுமதியுடன் செயல்படும் சில மனமகிழ் மன்றத்தில் தினமும் பல கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றது. இவற்றுடன் சேர்த்து அனைத்து மன்றங்களையும் ஏனாம் மண்டல நிர்வாகம் மூட உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விக்டரி என்ற மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியிருப்புக்கு மத்தியில் இந்த மணமகிழ் மன்றத்தை இயக்குவதற்கு கடுமையாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கவர்னராக உள்ள தமிழிசை பெண்களின் பிரச்சினையை உணர்ந்து மனமகிழ் மன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றத்திற்கு தீர்பபுக்கு பிறகு அனைத்து விதிகளை பின்பற்றி திறக்கப்பட்டு ள்ளதாக மன்ற மேலாளர் பாப்பா ராவு தெரிவித்தார்.பொது மக்களின் போராட்டத்தை மீறி மன்றம் செயல்பட தொடங்கி யுள்ளதால் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    • அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • இதற்கான பயணிகளை ஈர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    நேஷனல் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யாங்லூவின் மருத்துவ பள்ளி பேராசிரியர் தினேஷ்குமார், அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது புதுவையில் மருத்துவ, ஆரோக்கிய சுற்று லாவை மேம்படுத்துவது, இதற்கான பயணிகளை ஈர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் உதயசங்கர், காலாப்பட்டு பிம்ஸ் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகர், நிர்வாக அதிகாரி பிரசன்னா, வெங்கடேஸ்வரா கல்லூரி முதன்மை இயக்க அலுவலர் வித்யா, பொது மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.
    • இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சுனாமி, கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.

    இவர்களுக்கு பேரிடர் துறை மூலம் நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் ரூ.4 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. கை, கண், உறுப்பு 40 முதல் 60 சதவீத பாதிப்படைந்தால் ரூ.59 ஆயிரத்து 100, 60 சதவீதத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்த தொகை ரூ.74 ஆயிரம், ரூ.2. ½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்து ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் ரூ.12 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு வாரத்துக்கு குறைவாக சிகிச்சை பெற்றால் வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரத்து 300, ரூ.5 ஆயிரத்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    உடைமைகளை இழக்கும் குடும்பத்துக்கு ரூ.ஆயிரத்து 800, வீட்டு பொருட்களை இழந்தால் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு ள்ளது.

     முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம், குடிசை வீடுகளுக்கு ரூ.1.30 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500, குடிசைகளுக்கு ரூ.4 ஆயிரம், குடில்களுக்கு ரூ.8 ஆயிரம் நிவாரண தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கால்நடை ஷெட் இழந்தால் ரூ.3 ஆயிரம், பசு, எருமை இறந்தால் ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், இழுவை மாடுகளுக்கு ரூ.32 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல தோட்டக்கலை ஓராண்டு பயிர்களுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.8 ஆயிரத்து 500, பல்லாண்டு பயிர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500, செரிக்கல்சருக்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

    இந்த உயர்த்தப்பட்ட நிவாரண தொகை உடனடியாக அமலுக்கு வருவதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டுள்ளது.

    • தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை மறுநாளான நேற்று  தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.

    தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்கள் பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர்.  இதனால் புதிய பஸ்நிலையத்தில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. மழையை யும் பொருட்படுத்தாமல் பயணிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறினர். காலை 9 மணிக்கு மேல் கூட்டம் குறைய தொடங்கியது.

    புதுவையிலிருந்து சென்னை செல்ல வேண்டிய ரெயில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும். இதுதவிர பொதுமக்கள் பஸ்சை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இதனால் புதிய பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது.

    பெங்களூரு, காரைக்கால், கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    • சுண்ணாம்பாற்றில் மழைநீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது.
    • சுண்ணாம்பாறு முகத்துவார பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, தமிழக பகுதியில் தொடர் மழை காரணமாக சுண்ணாம்பாற்றில் மழைநீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சுண்ணாம்பாறு முகத்துவார பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமூக அமைப்புகள் சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்று காலை முகத்துவாரப் பகுதியை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.

    பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு முகத்துவாரம் வெட்டி விடப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனால் பேரடைஸ் பீச் பகுதி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் கரையோர கிராமங்களான சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில் ஆற்றின் கரை யோரத்தில் அமைந்துள்ள விளை நிலங்களிலும் மழை நீர் புகுந்துள்ளதால் ஏராள மான வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    ×