search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.
    • 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா "டெக்னோவேஷன் 2023" என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மருத்துவர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இன் செயல் இயக்குனர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு இந்திய ஆட்சிப்பணி குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக பேசினார்.

    போட்டியில் சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    முடிவில் கணினி பொறியியல் துறைத் தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பிரியாராதிகாதேவி நன்றி கூறினார்.

    • கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    • தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் அதிருப்தி ஆளர்கள் சார்பில் கேப்டன் பரமசிவம் தலைமையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 11-ந் தேதி சங்க தேர்தலை நிறுத்த வேண்டும். புதிய உறுப்பினர்களை பதிந்து பழைய உறுப்பினர்கள் இன்று வரை சந்தா செலுத்த செய்தும் முறைபடி தேர்தல் வாக்களர் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுவை பெற்று தேவையான அவகாசத்திற்கு பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைவர் கனகராஜ், முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதி குமார், கலியபெருமாள், ரங்கநாதன், ராஜா, ஜாபர், மற்றும் முன்னாள் ராணுவ வீரரும் தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில்  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே , காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இதே போல் கோரிமேடு அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று கால ை 10 மணி முதல் மால ை 5.30 மணி வரை போலீஸ் குடியிருப்பு, சிவாஜி நகர், இந்திராநகர் விரிவு, இலுப்பை தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து50 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    மீதம் உள்ள 90 ஆயிரம் லிட்டர் பால் அண்டை மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இந்த நிலையை மாற்றி நமது மாநிலத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

    பால் உற்பத்தி யாளர்களுக்கு பாண்லே மூலம் வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலையில் தீவனம் மீண்டும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.

    இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.

    மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
    • கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்கு வரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பத வியை பறித்தார்.

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ.வாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசால் சந்திர பிரியங்காவுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து தனது பொருட்களை எடுக்க சென்ற சண்முகத்தை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சண்முகம் காரைக்கால் திரும்பினார். தொடர்ந்து கணவன், மனைவி இடையே நிலவி வந்த குடும்ப பிரச்னை மோதலாக மாறியுள்ளது.

    இதற்கிடையே சந்திரபிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசனை சந்தித்தார்.

    அப்போது தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து விசாரித்து அறிக்கை தரும்படி, காரைக்கால் சீனியர் எஸ்.பி. கவுகால் நிதினுக்கு (பொறுப்பு) உத்தர விட்டுள்ளார். தற்போது சீனியர் எஸ்.பி. விடுப்பில் சென்றுள்ளார். 5 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருமாறு சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புகார் குறித்து காரைக்கா லில் உள்ள சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் அதிகம் உள்ளது. எனக்கு எதிராக சதி வேலை நடக்கிறது. எனவே இது தொடர்பாக சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்து உள்ளேன் என்றார்.

    • ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு என தனித்தனியே ஷோரூம்கள் செயல்படுகிறது.
    • பெண்களுக்கான குர்தி வகை டிரஸ்கள் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நேரு வீதி ராஜேந்திராஸ் துணிக்கடை யில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளு படியில் ஆடைகள் விற்பனை செய்யப்படு கின்றன.

    புதுச்சேரி நேரு வீதியில் ராஜேந்திராஸ் துணிக்கடை கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு என தனித்தனியே ஷோரூம்கள் செயல்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான புத்தம் புதிய டிசைன்கள் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளன.

    மேலும் உலகத் தரம் வாய்ந்த கம்பெனிகளான ரேமான்ஸ், லெனின் கிளப், பிளாக்பெர்ரிஸ், சன் நெக்ஸ், போன்ற கம்பெனிக ளின் ஆடைகள் ஆண்க ளுக்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகளுக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை வழங்கப்படுகிறது.

    மேலும் பெண்களுக்கான பட்டுப் புடவைகள், பேன்சி சாரிகள், சுடிதார் வகைகள், புத்தம் புதிய டிசைன்களில் விற்பனைக்கு குவிக்கப்ப ட்டுள்ளது. பெண்களுக்கான குர்தி வகை டிரஸ்கள் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை தீபாவளி வரை நடைபெற உள்ளது.

    • மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர் மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    • 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்படவில்லை.
    • பிற மாநிலங்கள் போல புதுவை யிலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் கைதிகள் 8-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இவர்கள் 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்பட வில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

    ஆனால் புதுவையில் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த கைதிகளில் சிலர் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று புதுவை தலைமை நீதிபதி சந்திரசேகரனை ஆயுள் தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், 14 ஆண்டுகள் முடிந்தும் பல ஆண்டாக தங்கள் குடும்பத்தி னர் சிறையில் உள்ளனர். நன்னடத்தையை சுட்டிக்காட்டி சிறை நிர்வாகம் விடுவிக்க முடி யாது என கூறி வருகிறது.

    இந்த கைதிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சிலர் சிறைக்குள் தொழில்கள் செய்துள்ளனர், அவர்களுக்கு சான்றிதழம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை விடுவிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. 

    • முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.
    • பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் 10 ஆண்டாக பணிசெய்த ஊழியர்களுக்கு பணிநி ரந்தரம் செய்யப்பட்டு, ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்ப டும் என முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.

    இதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி அரசு பணியா ளர்கள் நல கூட்டமைப்பினர் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நுற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சட்டக்கூலி ரூ.852 வழங்க வேண்டும். விடுபட்ட 117 ஊழியர்களை பொதுப்பணித்துறையில் இணைத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • தொழிலாளர் நலன் குறித்து விசாரணை
    • தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதில் 14 தொழிலாளர்கள் உடல் கருகி படுகாயமடைந்தனர். இவர்களில் 11 பேர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தீ விபத்து நடந்த ரெக்கவரி யூனிட், டிரை யூனிட் பகுதிகளில் தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அதிகாரிகள், விபத்து குறித்து விளக்கி ஆய்வறி க்கையை ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த தொழிற்சாலையில் மருந்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையாணை நோட்டீஸ் கம்பெனியின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்களை கொண்டு ஆராயவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

    தீ விபத்து தொடர் பாகவும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சாலையை நடத்த அனுமதியளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதனிடையே காலாபட்டில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதனால் தொழிற்சாலை முன்பும், சுற்றுப்புற கிராமங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    • விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயமடைந்த அனைவரும் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையை முழுமையாக மூட வேண்டும் என்று கூறி இன்று காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகச் செட்டிகுளம், பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ பஞ்சாயத்து நிர்வாகி வேலு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு உறுதி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    இதனை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுமார் ஒரு மணி நேர மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×