search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரி யோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஒற்றுமை தின விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஒற்றுமை தின விழாவின் உறுதி மொழியை ஏற்றனர்.

    மேலும் பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நிகழ்ச்சியினை காணொளி மூலம் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை தாமரை நகர் பகுதியில் நடைபெற்று வரும் கழிவு நீர் வாய்க்காலையொட்டி அச்சுக்கல் பதிக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பெரியசாமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தியாகி பெரியசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திப்புராயபேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளை கென்னடி வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் புதுவை மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

    இதன் தொடக்கவிழா புதுவையின் விடுதலைக்கு வாக்கெடுப்பு நடந்த கீழூரில் நடந்தது. முன்னாள் எம்.பி. ராமதாஸ் தலைமை வகித்தார். வெங்கட்ராமன் வரவேற்றார்.

    தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜவன், முதன்மை பொறியாளர் ரவி, பேராசிரியை செல்வகுமாரி, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி ரகோத்தமன் வாழ்த்தி பேசினர்.

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    புதுவைக்கு 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.

    மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டியுள்ளது. மாநில அந்தஸ்து கிடைக்கும்போது தான் மத்தியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    சமூகநீதியோடு கூடிய விரைவான வளர்ச்சியை உருவாக்கி பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் வாழும் போதுதான் புதுவை அரசிலிருந்து விடுதலை கிடைக்கும். புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

    சிவராந்தகம் கிராம பஞ்சாயத்து தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    • முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான கோண்டூர் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், பால முருகன், முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம் 9 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 9.50 மணிக்கு செல்வ விநாயகர், பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    • புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் கைதிகள் அமைத்த சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.

    தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், பட்டேல் சாதனைகளை எடுத்துக்கூறினார்.

    கைதிகள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி சூப்பிரண்டு கபிலன், அமிழ்தன் செய்திருந்தனர்.


    • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
    • தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) மேலாண்மைத் துறை சார்பில் நிலையான வளர்ச்சிக்கான வணிக மற்றும் நிர்வாகத்தில் சமகால சவால்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், விளக்கவுரை ஆற்றினார்.

    கருத்தரங்க தலைமை விருந்தினராக கலந்து கொண்ட புதுவை பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தலைவரும் பேராசிரி யருமான காசிலிங்கம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சமர்ப்பித்த 75 ஆய்வு கட்டுரைகளில் 63 ஆய்வு கட்டுரைகள், விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. பேராசிரியர் வைத்தீஸ்வரன் மற்றும் பேராசிரியர் மன்சூர் இப்ராஹிம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.

    கருத்தரங்க நிகழ்ச்சிகளை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் மேலாண்மை துறை பேராசிரியர்கள், அகல்யா, அருண் மற்றும் கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.


    • புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
    • மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.

    இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நேரு வீதி மிஷின் வீதி ,வழியாக சென்று காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளியில் நிறைவு பெற்றது.
    • அமைதி பேரணியில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக அமைதியை வலியுறுத்தி பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடி அசைத்து அமைதி புறாக்களை பறக்க விட்டு தொடங்கி வைத்தார். அமைதி பேரணி உப்பளம் பெத்திசெமினார் பள்ளியில் தொடங்கி அண்ணா சாலை ,நேரு வீதி மிஷின் வீதி ,வழியாக சென்று காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளியில் நிறைவு பெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ, முன்னாள்

    எம்.எல்.ஏ. அன்பழகன், புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட கல்வி செயலர் பீட்டர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் தேவதாஸ், துணை முதல்வர் ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைதி பேரணியில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது. 

    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. பெருமிதம்
    • என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மண்ணுக்கு வணக்கம் மாவீரர்களுக்கு வணக்கம் என்ற கருத்தின் அடிப்படை யில், என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இயக்கமானது தொடங்கப்பட்டது.

    இதன் நோக்கம் என்ன வென்றால் தேசத்திற்காக போர் செய்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற மண்களை சேகரித்து சுமார் 7,500 கலசங்களில் அவற்றை பராமரித்து அதனுடன் மரச் செடிகள் வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு அற்புதமான கோரிக்கையும் பிரதமர் மோடியால் நாட்டு மக்களுக்கு வைக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் சுமார் 7,500 கலசங்களில் மண்களை சேகரித்து மரச்செடிகள் உடன் அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவற்றை ஒருங்கிணைத்து தேசிய போர் நினைவு சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் என் மண் என் நாடு என்ற இயக்கத்தின் மூலம் அனைத்து தொகுதிகளிலும் அனைத்து பகுதிக ளிலும் பொது மக்களும்

    பா.ஜனதாவுடன் இணைந்து மண்களை சேகரித்து கலசங்கள் மரச்செடிகள் கொண்டு டெல்லிக்கு அனுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

    முக்கியமாக என் மண் என் நாடு முகாம் ஆனது நமது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான உணர்வை மேலும் பலப் படுத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் பெறப்பட்ட மண்ணிலிருந்து உருவாக் கப்படும். இந்த அம்ரித் வாடிகா கீழ் நாம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும், அவை ஒரு இந்தியா சிறந்த இந்தியாவின் தொலை நோக்குப் பார்வையை உணர செய்யும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்
    • வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பாலம் முதல் சுல்தான்பேட்டை வழியாக கோபால்சாமி நாயக்கர் மண்டபம் வரை உள்ள புறவழிச்சாலையில் போடப்பட்டிருந்த சோடியம் மின்விளக்குகளை பொதுப்பணித்துறை மற்றும் வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

    இதை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு புதிய எல்.இ.டி. விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன்அ, அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது தாஹா, ஜனா, கிளைச் செயலாளர்கள் திலகர், மிலிட்டரி முருகன், சுப்ரமணி, வீரக்கண்ணு, முருகேசன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ராஜ், மின்துறை கார்த்தி, பாலா, முத்து, அன்பு, கோதண்டபாணி, லட்சுமணன், ராஜ்முகம்மது, ஹாலிது, சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி.குற்றச்சாட்டு
    • நாராய ணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    புதுச்சேரி:

    பாகூர் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் பேசியதாவது:-

    பாகூர் தொகுதி காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதி. கடந்த எம்.பி. தேர்தலில் மிகப்பெரும் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். நீங்கள் ராகுல்காந்திக்காக ஓட்டு போட்டீர்கள். மோடி வேண்டாம் என நினைத்து ராகுல் காந்திக்கு ஓட்டு போட்டீர்கள். அதேபோல வரும் தேர்தலிலும் மோடியை ஒழித்துக்கட்ட வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

    அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    தற்போது இத்திட்டத்தை யேநிறுத்திவிட்டனர். அதற்கான பணத்தையும் வழங்கவில்லை. இதனால் முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர். கியாஸ் வாங்கினால் ரூ.300 வழங்குவோம் என்றனர்.

    ஆனால் அதையும் தரவில்லை. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றனர். அதையும் வழங்கவில்லை. பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் புதுவை மக்களை ஏமாற்றுகின்றனர்.

    ரங்கசாமி ஆட்சியில் தெருவுக்கு தெரு சாராயம், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும். இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ், ரூ.2 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்ப டுகிறது. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்க ப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி யிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தி வெற்றி பெற கை சின்னத்து க்கு வாக்க ளிக்க வேண்டு ம். இவ்வாறு அவர் பேசினார்.

    • நீதிமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தலைமை நீதிபதி சந்திரசேகரன் தேசியக்கொ டியை ஏற்றினார்.
    • செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் விடுதலை நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தலைமை நீதிபதி சந்திரசேகரன் தேசியக்கொ டியை ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரவீந்திரன், ஜி.பி. ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர்கள் கல்யாண சுந்தரம், சங்கரதாஸ், மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணி, சாய் ராஜகோபால், பாலசுந்தரம், கண்ணன், இணை செயலாளர்கள் வடிவரசன்,

    திருமலைவாசன், சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

    ×