search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி தலைமையில் நிர்வாகிகள் அண்ணாசிலை அருகே கூடினர்.
    • கையில் கருப்பு துணியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்ட பேனரை தூக்கிப் பிடித்தனர்.

    புதுச்சேரி:

    தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கைவிலங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில்  தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி தலைமையில் நிர்வாகிகள் அண்ணாசிலை அருகே கூடினர்.

    புதுவை விடுதலைக்காக போராடிய தியாகிகளின் உருவப்படங்களுடன் கூடிய பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அசோக்ராசு, சத்தியமூர்த்தி, முருகுனுகுமார், சுபாஷ் சந்திரபோஸ், பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சிவக்குமார், மீனவர் விடுதலை வேங்கை மங்கையர்செல்வன், தமிழ் கழகம் தமிழுலகன், தமிழர்களம் அழகர், வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், மனித உரிமைகள் கழகம் முருகானந்தம் உட்டபட பல்வேறு அமைப்புகளை சர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கையில் கருப்பு துணியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்ட பேனரை தூக்கிப் பிடித்தனர். போலீசார் இதற்கு அனுமதியில்லை எனக்கூறி பேனரை பறித்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அந்த பேனரை பறித்துச்சென்றனர்.

    மேலும் தடையை மீறி போராட்டம் நடத்திய 18 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.  

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி
    • விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள்.

    புதுச்சேரி:

    மாகி பிராந்தியத்தில் புதுவை விடுதலை நாளை யொட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள். ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி நமது சுதந்திர போராட்டத்தின் போது முன்னோர்கள் செய்த மாபெரும் தியாகங்கள் நம்மை நினைவுகூறச் செய்கிறது.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்த விடுதலை நாளில் தலை வணங்குவதைப் பெருமை யாக கருதுகிறேன். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் புதுவை மாநிலத்தில் சிறப்பான சாதனைகள், வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு புதுவை மக்களின் குறிப்பாக மாகி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஒரே சமுதாயம், ஒரே கனவு, ஒரே தீர்மானம், ஒரே திசை மற்றும் ஒரே இலக்கை உருவாக்குவதே நம்முடைய குறிக்கோள் ஆகும். மாகி மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வரும் காலங்களிலும் மாகி பகுதிக்கு தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்க ளையும் முன்னெடுத்து மாகியை அனைத்து வகையிலும் மேம்பட்ட வட்டாரப் பகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பரபரப்பு தகவல்
    • காலத்தோடு கலந்தாய்வு நடத்தாத சென்டாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடக்கிறது, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகம் செயல்படுகிறது என அரசியல்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30ந் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க அறிவுறுத்தியது.

    ஆனால் சென்டாக் நிர்வாகம் காலத்தோடு கலந்தாய்வை நடத்தவில்லை. இதனால் முதல்-அமைச்சர், கவர்னர் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி காலதாமத கலந்தாய்வுக்கு அனுமதி பெற்றுள்ளனர். காலத்தோடு கலந்தாய்வு நடத்தாத சென்டாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

    இதனிடையே தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகியுடன், சென்டாக் கன்வீனர் சிவராஜ் அலுவலகத்தின் எதிரே காரில் அமர்ந்து பேசிய வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில் சென்டாக் கன்வீனர் சிவராஜ் அதிரடியாக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்டாக் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டாக பதவி வகித்த ருத்ரகவுடுவும் மாற்றப்பட்டுள்ளார்.

    சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளராக இருந்த உயர்கல்வித்துறை இயக்குனர் அமன்சர்மா சென்டாக் ஒருங்கிணைப்பா ளராகவும், வில்லியனூர் கஸ்தலூரிபாய் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் செரில் ஆன் கெரடின் சிவன் சென்டாக் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்டாக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் அதன் அடுத்தகட்ட நட வடிக்கைகள் தெரியவரும்.

    • அன்பழகன் ஆவேசம்
    • புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என்று இவர் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் சந்திப்பு கே.வி.பி மஹாலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மணவெளி தொகுதி செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வி.கே.மூர்த்தி, அன்பழகன், சீவராமராஜா,மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நம் தொண்டர்களின் உழைப்பால் உருவானது. அதை மறந்துவிட்டு கடந்த 2 1/2 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ளவர்கள் நம்மை பற்றி சிந்திக்காமல் ஆட்சி நடத்தினர். பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அறிவித்த பிறகு புதுவை மாநிலத்தில் தமிழகம் போன்று அ.திமு.க. வீறுகொண்டு எழுந்துள்ளது.

    முதல்- அமைச்சரின் பணியில் பா.ஜ.க. துணையோடு ஒரு இணை முதல்- அமைச்சர் போன்று சபாநாயகரின் செயல்பாடு உள்ளது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சபாநாயகர்களும் செய்ய துணியாத பல விஷயங்களை மரபு மீறி நம் சட்டப்பேரவை தலைவர் செய்து வருகிறார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சி சார்பில் நடைபெறும் திறந்தவெளி பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

    பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை போன்ற பல்வேறு துறைகளின் அறிவிப்புகளை தானே வெளியிடுகிறார். புதுவை மாநிலத்தில் புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என்று இவர் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பார்.

    என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. தங்களுடைய மக்கள் செல்வாக்கு என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் அதிகார ஆட்டம் ஆடிக்கொண்டு வருகின்றனர்.

    சபாநாயகரின் செயலை முதல்- அமைச்சர் வேடி க்கை பார்த்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,

    மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், . எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, காந்தி, மணவாளன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

    முடிவில் நோணாங்குப்பம் வார்டு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்
    • பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில், 12 மணி நேரத்திற்கு மேல் மின் தூண்டிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள துணை மின் நிலையம் முன்பு, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையததில், சில மின் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்த நிலையில், இரவு 11 மணியாகியும், மின் இணைப்பு தராததால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளகினர்.

    தொடர்ந்து, பலமுறை மின்துறைக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் முன்பு, திடீரென கூடி, தங்களின் வாக னங்களை சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட் டதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.

    • காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
    • திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோர்க்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், மணக்குப்பம், சங்கரன்பேட், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், சாத்தமங்கலம், சிவராந்தகம் மற்றும் கீழூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் திருபுவனை துணை மின் நிலையத்திலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலிதீர்த் தாள்குப்பம், திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • காசோலையை உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதியில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தி ருந்தார்.

    இதற்கான காசோலையை உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார். மேலும் கண் பார்வை குறைபாடு உள்ளவருக்கு தனது சொந்த செலவில் மருத்துவ பரிசோதனை செய்து இலவச கண்ணாடி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அன்வர், நிசார், செல்வம், கலப்பன், காளியம்மா, சந்துரு, மணி, கணேசன், கருப்பையா, வாசுதேவன், ராகேஷ், பாஸ்கல், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
    • ஒற்றுமை தீபத்தை முதல் மாணவர் ஏந்தி ஓட பள்ளியின் அனைத்து மாணவர்களும் பள்ளியைச் சுற்றி வலம் வந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா கொண்டாட ப்பட்டது.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை " புதுச்சேரி அரசின் வழிகாட்டலின்படி ஒற்றுமைக்கான ஓட்டம்" என்ற நிகழ்வை ஒற்றுமை தீபத்தோடு மாணவர்கள் மேற்கொண்டனர். ஒற்றுமை தீபத்தை முதல் மாணவர் ஏந்தி ஓட பள்ளியின் அனைத்து மாணவர்களும் பள்ளியைச் சுற்றி வலம் வந்தனர். சுமார் ஆயிரம் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் தலைவர் இருதயமேரி ஜோதி ஏற்றி ஓட்டத்தை தொடங்கிவைத்தார் , தாளாளர் ராஜராஜன் சிறப்புரையாற்றினார். முதல்வர் நீலம் அருள்செல்வி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    • 5-ந்தேதி வரை புதுவை மாநிலத்தை சார்ந்த காரியமானிக்கம் மற்றும் பண்டசோழநல்லூர் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
    • சுற்றுவட்டார பகுதியை சார்ந்த விவசாய பெருமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா கடந்த 30-ந்தேதி கல்லூரியின் கலையரங்கில் நடந்தது. அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை புதுவை மாநிலத்தை சார்ந்த காரியமானிக்கம் மற்றும் பண்டசோழநல்லூர் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

    விழாவிறகு கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன், செயலாளர் மருத்துவர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முகமது யாசின் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பா ளராக புதுவை மாநில அரசின், விவசாய துறையின் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் பங்கேற்று பேசினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியைகள் ரேவதி, சரோஜா புதுவை அரசின் காரியமானிக்கம் பகுதி வேளாண் அலுவலர் திருநாடன், பண்ணை மேலாளர் சிவகுமார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த விவசாய பெருமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
    • கடல் நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். ராக் பீச் என அழைக்கப்படும் புதுவை கடற்கரை 2 கி.மீ. தூரம் நீளம் கொண்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் செம்மண் கலரில் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் ஏற்கனவே கடல் நீர் செம்மண் கலரில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் இன்று காலை கடல் நீர் நிறம் மாறியது. செம்மண் கலரில் மாறிய கடலை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    3-வது முறையாக புதுச்சேரி கடல் நிறம் மாறியதால் ஏதாவது வானிலை மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு சந்தை தோப்பு எதிரில் சாராய கடை உள்ளது.

    இந்த சாராய கடையை ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் நடத்தி வருகிறார். மர்மநபர்கள் 3 பேர் இரவில் சாராய கடைக்கு வந்தனர்.

    அவர்கள் கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.

    ஆனால் அவர் சாராயம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காசாளரி டம் தகராறு செய்து அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து 3 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாராய கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். அந்த பெட்ரோல் குண்டு கடையின் முன்பு விழுந்து வெடித்து தீப்பிடித்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாராய கடை ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் 3 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து திருபுவனை போலீசில் காசாளர் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி இந்திராகாந்தி சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் இன்று அனுச ரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள்

    எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நிர்வாகிகள் சரவணன், சேகர், கோவிந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் உட்பட பலர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி (உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ஏம்பலம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மண்ணாங்கட்டி, பாலையா மற்றும் நிர்வாகிகள் சக்ரவர்த்தி கிராமிணி, பாலு, செல்வம், லெனின், ராஜாராம், ஜெபக்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    ×