search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    .
    X
    .

    காந்தி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றாக சேலத்தில் ரூ.20 கோடியில் புதிய விளையாட்டு மைதானம்-விரைவில் அமைக்க நடவடிக்கை

    சேலத்தில் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றாக ரூ.20 கோடியில் புதிய விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    சேலம்:

    சேலம் காந்தி விளையாட்டு மைதானம் கடந்த 1972-ம் ஆண்டு பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டது. இந்த மைதானம் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இங்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், வில்வித்தை போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன. நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகிய வசதிகளும் உள்ளன.

    ஆனால் மைதானத்தில் ஆக்கி, கால்பந்து மற்றும் தடகளம் விளையாட்டிற்கு ஏற்ப செயற்கை விளையாட்டு தளம் அமைக்க வேண்டும், மேலும் உள் விளையாட்டு அரங்கத்தின் தரைதளத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதன் மூலம் கைப்பந்து, இறகுபந்து கூடைப்பந்து உள்பட போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியும். 

    இதனால் காந்தி வி¬ளாயட்டு மைதானத்தை மாற்று இடத்தில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாக  அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டு விளையாட்டு ஆணைத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாவட்டத்தில் மைதானம் அமைக்க நிலங்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. 

    இதில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திலும், இரும்பாலை மற்றும் ஏற்காடு அடிவாரத்திலும் என 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, 

    இதில் ஒரு இடத்தை தேர்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கும். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கவும் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் அந்த பணிகளும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×