search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உபி யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய உ.பி. யோதாஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள உ.பி.யோதாஸ் 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 43 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணி 41- 35 என யு மும்பா அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.

    • ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
    • இதில் 2வது சுற்றில் இந்தியா ஜப்பானை வென்றது.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

    நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. இதில் இந்தியா 3-2 என திரில் வெற்றி பெற்றது.

    சனிக்கிழமை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்தியா சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 303 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 204 ரன்கள் எடுத்து தோற்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடரில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணி தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. கம்ரன் குலாம் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 50 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ரசா, ரிச்சர்ட் நரவா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட்களை இழந்தனர்.

    கேப்டன் கிரெய்க் எர்வின் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

    இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கம்ரான் குலாமும், தொடர் நாயகனாக சயீம் அயூபும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.
    • இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    சிறப்பாக விளையாடி பவுமா (70) அடித்து அவுட் ஆனார். இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 13.5 ஓவர்களை மட்டுமே தாக்குபிடித்த இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். குறிப்பாக 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ளது.
    • ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரணடு நாட்கள் நடைபெற்றது. இதில் தக்கவைத்த வீரர்கள் தவிர்த்து 182 வீரர்கள் வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    ஆர்.சி.பி. விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏலத்தில் புவி, ஹேசில்வுட், நுவான் திஷாரா, லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளரை எடுத்துள்ளது.

    ஆகவே இந்த வருடமும் 'ஈ சாலா கப் நமதே' மோடில் பெங்களூரு அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை அணிக்கு சமமாக பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

    ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ள நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ரசிகர்களை கவர்வதற்காக இந்தியில் ஒரு எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ளது. அதில் ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர். அந்த எக்ஸ் கணக்கை தற்போது வரை 2600க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியில் ஆர்.சி.பி. அணி எக்ஸ் கணக்கு தொடங்கியுள்ளது கர்நாடகா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பி. அணியை கன்னட ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

    அதே சமயம் இந்தி மொழியில் ஆர்.சி.பி. எக்ஸ் கணக்காகி தொடங்கியுள்ளதை இந்தி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏலத்தில் அதிகபட்ச தொகையாக பண்ட் ரூ. 27 கோடிக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெகா ஏலம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும் அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

    என்னதான் அதிக தொகைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை வைத்து பார்க்கும் போது ஜித்தேஷ் சர்மா முதல் இடத்தில் உள்ளார். 

    நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உய உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார். ஏலத்தில் ஜித்தேஷ் சர்மாவை பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு (ரூ.20 லட்சம்) ஆகும்.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மார்க்ரம் 9, டோனி டி ஜோர்ஜி 4, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 16, டேவிட் பெடிங்ஹாம் 4 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 20.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கேப்டன் பவுமா 28 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் பவுமா ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன.

    சிறப்பாக விளையாடி பவுமா (70) அரைசதம் அடித்து அவுட் ஆனார். முடிவில் 49.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது.
    • 2-வது போட்டிக்கு முன்னர் இந்திய அணி 2 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு முன்னர் 2-நாள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி கான்பெராவுக்கு சென்றுள்ளது.

    இந்நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை நேரில் சந்தித்தினர். அப்போது கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

    முதலாவதாக பும்ராவை அறிமுகப்படுத்தினார். அதை போல அடுத்த இருந்த விராட் கோலியை அறிமுகப்படுத்த ரோகித் முயற்சித்தார். உடனே இவரை தெரியாமல் இருக்க முடியுமா என்பது போல பிரதமர், சிரித்தப்படி கோலியிடம் பேசி மகிழ்ந்தார்.

    அப்போது, பெர்த்தில் உங்களது சதம் சூப்பர். ஆனால் அது எங்களுக்கு பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதற்கு விராட், கொஞ்சமாக மசாலா சேர்க்க வேண்டும் என கூறினார். உடனே பிரதமர் சிரித்தபடி சரி நீங்கள் இந்தியர்கள் ஆச்சே என கூறி அடுத்த வீரரை சந்தித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோதின.
    • இதில் பரோடா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான தமிழ்நாடு அணியும் குர்ணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 30 பந்தில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங்கை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    இந்த போட்டியில் குர்ஜப்னீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர் 1 பவுண்டரி விளாசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஓவரை பறக்க விட்ட மும்பை கேப்டன் என சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் விஜய் ஷங்கர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மும்பை - சிஎஸ்கே என்ற போட்டி ஆரம்பித்து விட்டது.



    • மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் செய்த சாதனைகளை அரசு செய்தி குறிப்பு மூலம் பட்டியலிட்டு உள்ளது.

    சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை ரூ.25 லட்சத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு பயனாளிகளின் எண்ணிக்கை 12 லிருந்து 27-ஆக இரட்டிப் பாக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியின் வழிவகையில், 4 உயர் செயல்திறன் கொண்ட வெளிநாட்டு பயிற்றுநர்கள், 5 நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் 2 பாரா விளையாட்டு பயிற்றுநர்கள் சர்வதேச அளவிலான பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டின் 12600 கிராம பஞ்சாயத்துகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் ரூ.85.99 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

    ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, துரோபால், கபடி, செஸ், கேரம், பூப்பந்து, டென்னிகாய்ட் மற்றும் சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான 33 வெவ்வேறு விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு உள்ளது.

    அனைத்து நவீன விளையாட்டரங்கங்கள் மற்றும் மாவட்ட விளையாட்டரங்கங்கள் ரூ.5.30 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்காக செயற்கை இழை தடகளப்பாதை ரூ.8.64 கோடியில் மறுசீரமைக்கப்பட்டது.

    சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.

    பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் தகுதி பெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்க தொகை வழங்கப்பட்டது.

    இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    2024-ம் ஆண்டில் சதுரங்க போட்டியை கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தியது. இதில் 8 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தை ஈர்த்தனர். மொத்த பரிசுத் தொகை ரூ.70 லட்சம் ஆகும். மேலும், இப்போட்டி களை நடத்துவதற்காக ரூ.2.61 கோடி வழங்கப்பட்டது.

    இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை சென்னையில் நடத்தியது. இப்போட்டி நடத்தியதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் நகரமாகவும் ஒரே நகரமாகவும் சென்னை திகழ்கிறது. இப்போட்டி சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி நடைபெற்றது. இது இந்தியா மற்றும் தெற்காசியா விலேயே மிக நீளமான சுற்று ஆகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.40 கோடி வழங்கப்பட்டது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 93 ரன்னில் அவுட் ஆனார்.
    • இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை கடந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து பிலிப்ஸ் - டிம் சவுதி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    இதனால் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்தது. பிலிப்ஸ் 41 ரன்களுடனும் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×