search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    Swapnil Kusale
    X

    ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ரூ.1 கோடி பரிசு: மகாராஷ்டிரா அரசு

    • இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
    • இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

    மும்பை:

    பிரான்சின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மதியம் நடந்தது.

    இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.

    இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.

    சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    குசாலேவுடன் குடும்பத்திரை போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×