search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • விராட் கோலியின் பணி நிலைத்து நின்று விளையாட வேண்டும்- ஸ்ரீசாந்த்
    • ஓவருக்கு 11 அல்லது 9 ரன்கள் அடிக்க போதுமான திறமை விராட் கோலியிடம் உள்ளது- டாம் முடி

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி தேர்வு, இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரரின் ரோல் என்ன? என்பது குறித்து பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து டிவி-யின் லைவ் நிகழ்ச்சயில் ஸ்ரீசந்த் மற்றும் டாம் மூடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது ஸ்ரீசாந்த் கூறும்போது "விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளம் இறங்க வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில் களம் இறங்கி Anchor ரோலில் (நிலைத்து நின்று) விளையாட முடியும்" என்றார்.

    அப்போது குறிக்கிட்டு ஸ்ரீசாந்த் பேசியதை திருத்தி கூறினார் டாம் மூடி. டாம் மூடி கூறுகையில் "Anchor என்ற வார்த்தை தவறு. அதை அவர் திருத்த வேண்டியது அவசியம். டி20 கிரிக்கெட்டில் அவருடைய புத்திசாலித்தனம், அனுபவம் ஓவருக்கு 11 அல்லது 9 ரன்ரேட் என்பதற்கு போதுமானது" என்றார டாம் மூடி.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தொடக்க வீரரான களம் இறங்குவாரா? என்பது சந்தேகம்தான்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடாது என பிசிசிஐ அறிவிப்பு.
    • அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளிலும் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களை புறக்கணித்தால் அது பின் விளைவை ஏற்படுத்தும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ரஷித் லத்தீப் கூறியதாவது:-

    இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நீங்கள் மறுக்க முடியும். ஐசிசி தொடர்களை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஐசிசி திட்டத்தை வெளியிடும்போது, அவர்கள் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது அணிகளுக்கு தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தன் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் போர்டுகள் கையெழுத்திடுகின்றன.

    1996 உலகக் கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கை சென்று விளையாட மறுத்தது. இதனால் போட்டிகளில் விளையாடாமல் காலிறுதிக்கு முன்னேறியது. அதோடு உலகக் கோப்பையையும் வென்றது. இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தால் அது பிசிசிஐக்கு பின் விளைவை ஏற்படுத்தும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்துள்ளது. இந்திய அணிகளின் ஆட்டங்களை ஒரே மைதானத்தில் நடத்த ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது.

    • பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • சாவ்லா 184 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை 9 ரன்னில் ஆவுட்டாக்கினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பிராவோவை 3-வது இடத்திற்கு தள்ளி, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை அவுட்டாக்கியதன் மூலம் 184 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சாஹல் 200 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 178 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.

    • 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • லக்னோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?. லீக் சுற்றோடு வெளியேறுவது யார்? போன்ற முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து வருகிறது.

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியது உள்ளது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மொத்தம் அறு வெற்றிகள் ஆகும்.

    ராஜஸ்தான் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது. கொல்கத்தா 10-ல் 7-ல் வெற்றி பெற்றுள்ளது.

    எல்எஸ்ஜி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்த அணி இன்னும் 4 போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும். தற்போது ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

    ஆர்சிபி 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தால் மும்பையை போன்று ஏறக்குறைய பிளுஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது
    • கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,

    "என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

    களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் ( டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிவாங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழைய எஞ்சிய 4 ஆட்டங்களும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த ஆட்டத்தில் டக்அவுட் ஆனதால் அணி போதுமான ரன்களை குவிக்கவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 509 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

    நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது. 5 பவுலர்கள் ஆடவில்லை.

    14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காளதேசம் திரும்பியுள்ளார். பதிரனா, தீக் ஷனா உலக கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கை சென்றுள்ளனர். தீபக் சாஹர் காயத்தில் உள்ளார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது சி.எஸ்.கே.வுக்கு பாதிப்பே. நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் முழுமையான மாற்றம் இருக்கும்.

    பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றி , 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ, ஷசாங்சிங், பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரண், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15-ல், பஞ்சாப் கிங்ஸ் 14-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் வருண்சக்கரவர்த்தி, சுனில் நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

    பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இஷான் கிஷன் 13, ரோகித் 11, நமன் 11, திலக் வர்மா 4, வதேரா 6, பாண்ட்யா 1 என பெவிலியன் திரும்பினர்.

    ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசினார். இவரும் டிம் டேவிட்டும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். இதனால் மும்பை அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அந்த வேளையில் 56 ரன்கள் எடுத்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகி வெளியேறினார். டிம் டேவிட்டும் 24 ரன்னில் வெளியேற மும்பை அணியின் தோல்வி பிரகாசமானது.

    இதனால் மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் வருண்சக்கரவர்த்தி, சுனில் நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • வங்காளதேசம் தரப்பில் தன்சித் ஹசன் 67 ரன்னிலும் டவ்ஹித் ஹ்ரிடோய் 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஜிம்பாப்வே அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக ஜே கும்பி- கிரேக் எர்வின் களமிறங்கினர். கிரேக் எர்வின் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ஜே கும்பி 17 ரன்னிலும் அடுத்து வந்த பிரையன் பென்னட் 16, வில்லியம்சன் 0, கேப்டன் ராசா 0, ரியான் பர்ல் 0, எல் ஜாங்வே 2 என வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 41 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனையடுத்து கிளைவ் மடாண்டே- டபிள்யூ மசகட்சா ஜோடி பொறுப்புடன் ஆடி விளையாடி ரன்களை உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 43 ரன்னிலும் டபிள்யூ மசகட்சா 34 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மகேதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன்- லிட்டன் தாஸ் களமிறங்கினர். லிட்டன் தாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் சாண்டோ 21 ரன்னில் வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து தன்சித் ஹசன்- டவ்ஹித் ஹ்ரிடோய் ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வங்காளதேச அணி 15.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் 67 ரன்னிலும் டவ்ஹித் ஹ்ரிடோய் 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இதுவரை இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அணிக்கு ரோவ்மேன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

    ரோவ்மேன் பவல், அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட்.

    • போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும்.
    • தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான எதிர்கால திட்டத்தில் 26 வயதான ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தார். என்றாலும் பிசிசிஐ நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல திட்டமிட்டதால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடக்கம்தான், ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறுகையில் "போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆகவே, அவர்கள் (தேர்வாளர்கள்) கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர். இதனால் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இது தொடக்கம்தான். இதற்காக அவர் மனம் தளரக் கூடாது.

    தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான அணி. அனைவரும் மேட்ச் வின்னர்கள். 15 பேரும் தேர்வுக்கான வீரர்கள். ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.

    • கொல்கத்தா அணி தரப்பில் வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த மனிஸ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.

    பொறுப்புடன் ஆடிய மனிஷ் பாண்டே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் 7 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதிவரை அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    ×