search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    • இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

     

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி பல இளம் வீரர்கள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. தற்போது இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எல். ராகுலுக்கு இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடமில்லை.

    இதே போன்று ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் திலக் வர்மா, ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

    • உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
    • உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
    • விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    அந்த வரிசையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது. 




    அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 



    • கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
    • உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.

    இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    • 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

    அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    • டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து மட்டுமே இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

    உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறப் போகும் 15 வீரர்கள் யார்-யார்? என்று நாள்தோறும் முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

    2-வது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், உள்ளனர். இதில் சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவிக்கும். இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 15 வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் அல்லது முகமது சிராஜ்.

    கே.எல்.ராகுல், யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா ஆகியோரும் தேர்வுக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும், 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 47 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று 3, 4, 5, 6-வது இடங்களில் உள்ளன.

    குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணிகள் தலா 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.

    • கொல்கத்தா அணியின் பில் சால்ட் 68 ரன்களை குவித்தார்.
    • டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

    154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
    • 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக மயங்க் அகர்வால் விளையாடி வருகிறார். இவர் இரண்டு போட்டிகளில் களம் இறங்கி அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 155 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

    அதிவேகமாக பந்து வீசினாலும், துல்லியமாக பந்து வீசினார். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் ரன்கள் குவிக்க திணறினார். இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    ஆனால், 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நிலையில் நாளை மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாட அனைத்து வகையிலான டெஸ்டிலும் தேர்ச்சி பெற்று விட்டனர் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் மோர்கல் தெரிவித்துள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் லக்னோ 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    • ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை
    • டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அழுத்தம் ஏற்படும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    அஷ்வின் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார்.

    இந்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

    • கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

    கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×