search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்த படத்துக்கு தற்காலிக தலைப்பாக சிக்ஸ் சிக்ஸர்கள் என இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.

    சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக உள்ளது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    யுவராஜின் பலத்தால், இந்தியா 2011-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

    • சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது.
    • ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று தெரிந்தும், எத்தனைப் பேர் தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டுகிறார்கள்? செல்போன் பேசிக் கொண்டு எத்தனைப் பேர் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்? போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் எத்தனைப் பேர் விபத்தில் பலியாகின்றனர்? அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நிச்சயமாக நம்மால் விபத்துகளைத் தடுக்க முடியும்.

    ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

    இந்நிலையில் 'Zero is Good' பிரச்சாரத்திற்க்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, அதுவும் சென்னையை அங்கமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.


    அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது.
    • ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது.

    இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

    மேலும் இப்படியான மாநில டி20 லீக்குகளில் தரம் மற்றும் வரவேற்பில் டிஎன்பிஎல் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உத்திர பிரதேஷ் டி20 லீக்கில் ஒரே தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரால் பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை.

    இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது.

    இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் டிராபி உடன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்பது மிகவும் நல்ல விஷயம் .வீரர்களைக் கண்டறிவதற்கு இதுதான் மிகச்சிறந்த வழி. இங்கு பேட் மற்றும் பந்துவீச்சின் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை அடுத்து இந்திய அணிக்கு கொண்டு செல்லலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
    • குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

    இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.
    • தசைப்பிடிப்பால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    தசைப்பிடிப்பால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். துணை கேப்டன் பொறுப்பு ஹாரி புரூக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    இங்கிலாந்து அணி வருமாறு:- டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், மேத்யூ போட்ஸ், மார்க்வுட், சோயிப் பஷீர்.

    • இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    • இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது.

    மும்பை:

    20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருக்கிறது.

    இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தனர். இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய 3 இடங்கள் உள்ளன.

    இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது. இலங்கை, ஜிம் பாப்வே நாடுகளும் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் உள்ளன.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • ஆஸ்திரேலிய அணி 2014-15-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் நவம்பர்22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணி 2014-15-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தொடர்ந்து 4 தொடர்களை அந்த அணி பறிகொடுத்துள்ளது. இதில் உள்நாட்டில் இரு டெஸ்ட் தொடரில் தோற்றதும் அடங்கும். இதற்கிடையே ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்சுக்கு 8 வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து ஏறக்குறைய 18 மாதங்களாக நான் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறேன். இந்த ஓய்வு நான் இன்னும் புத்துணர்ச்சியுடன் திரும்புவதற்கு உதவும். பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இதுவரை நான் வென்றதில்லை. அதை வெல்வதற்குரிய நல்ல நிலையில் நாங்கள் இருக்கிறோம்' என்று கம்மின்ஸ் குறிப்பிட்டார்.

    • இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • முதல் ஆட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    டிரினிடாட்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்த்ரே ரஸ்சல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட் மயர் அணிக்கு திரும்பியுள்ளார். 20 ஓவர் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-

    ரோவ்மன் பாவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானஸ், பேபியன் ஆலன் நிக்கோலஸ் பூரன், சார்லஸ், மேத்யூ போர்டே, ஹெட்மயர், ஷாய் ஹோப், அகேல் ஹூசைன், ஷமர் ஜோசப், மெக்காய், குடாகேஷ், ரூதர்போர்டு, ஷெப்பர்டு.

    • துவக்க வீரர்களாக சேவாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
    • விராட் கோலியை 5-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்த்திக் தன்னுடைய கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தரமான வீரர்களை கொண்ட ஆல் டைம் கனவு அணியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் எம்எஸ் டோனி இல்லாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

    அதே போல 1983 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கபில் தேவ் வரலாற்றின் மகத்தான ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் அவரையும் தினேஷ் கார்த்திக் தனது அணியில் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமாக அமைகிறது.

    அவருடைய அணியில் துவக்க வீரர்களாக சேவாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் பெருஞ்சுவரான ராகுல் டிராவிட் 3-வது இடத்திலும் சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும் தேர்வாகியுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை 5-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார். -

    அதைத் தொடர்ந்து இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனான யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அவர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஸ்பின்னர்களாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜாகீர் கான் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவை தேர்ந்தெடுத்துள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணி:

    வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான். 12-வது வீரர் : ஹர்பஜன் சிங்

    • இலங்கை அணி தரப்பில் ஹர்ஷிதா சதம் விளாசினார்.
    • அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய லியா பால் 81 ரன்களை விளாசினார். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி, அச்சினி குலசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

    அதன்பின் இணைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா மற்றும் கவிஷா தில்ஹாரி இணை அபாரமாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

    அதன்பின் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் கவிஷா தில்ஹாரி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரமா தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

    ஆனால் அதன்பின் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாசினி பெரேரா 14, சஞ்சினி நிசம்சாலா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, அதேஷிகா பிரபோதனி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

    இதனால் இலங்கை அணி 48 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அர்லீன் கெல்லி 3 விக்கெட்டுகளையும், ஜேன் மாகுவேர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதன்மூலம் அயர்லாந்து அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லியா பால் ஆட்டநாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரை வென்றதன் மூலம் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அயர்லாந்து அணி இருதரப்பு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

    • ஜார்கண்ட் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மத்தியபிரதேசம்.
    • 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ஜார்கண்ட் அணி ருசித்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு நினைவு அகில இந்திய கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நெல்லை, சேலம், கோவை, நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    இதில் மத்தியபிரதேசம்- ஜார்கண்ட் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நெல்லையில் நடந்தது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 225 ரன்னும், ஜார்கண்ட் 289 ரன்னும் எடுத்தது. 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 238 ரன்களில் அடங்கியது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜார்கண்ட் 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதி கட்டத்தில் 8 விக்கெட்களை ஜார்கண்ட் அணி இழந்திருந்தது. கடைசி 12 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசினார்.

    இதனால் 54.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ஜார்கண்ட் அணி ருசித்தது. கேப்டன் இஷான் கிஷன் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். கேப்டனாக இஷான் கிஷன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று 2 சிக்சர்களுடன் முடித்து வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பெண்கள் உலகக் கோப்பையை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
    • தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.

    துபாய்:

    2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை மலேசியாவில் 4 இடங்களில் நடக்கிறது. பெண்கள் உலகக் கோப்பையை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.

    இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு முன்னேறும். நடப்பு சாம்பியன் இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பிடித்திருக்கிறது. இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, மலேசியா ஆகியவை மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை ஜன.19-ந் தேதி சந்திக்கிறது.

    தொடர்ந்து 21-ந்தேதி மலேசியாவுடனும், 23-ந்தேதி இலங்கையுடனும் மோதுகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 'டி' பிரிவிலும், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 'பி' பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.

    ×