search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது.
    • இந்த போட்டியில் ரெயின்போ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

    நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது. இந்த போட்டியில் 45 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சோகோ ரேன்சர்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய ரெயின்போ அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ப்ரான்சிஸ் கடைசி பந்தை சிக்சராக விளாசினார்.

    இதனையடுத்து வெற்றியை கொண்டாடும் விதமாக பேட்டை பறக்கவிட்டார். அந்த பேட் நடுவரின் காலில் வந்து தாக்கியது. வலியால் துடித்த நடுவர் அந்த சமயத்திலும் பணியை சிறப்பாக செய்யும் விதமாக சிக்சர் என சிரித்தப்படி வழங்கினார். நடுவர் மீது பேட் பட்டத்தை கண்டும் காணாமல் இருந்த பேட்டர் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இலங்கைக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பல்லகெலே:

    இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே அடித்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.

    இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், வங்காளதேசம் (104 தோல்வி) 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (101 தோல்வி) 3-வது இடத்திலும் உள்ளன.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட அணி (சூப்பர் ஓவர் உட்பட):-

    இலங்கை - 105 தோல்வி

    வங்காளதேசம் - 104 தோல்வி

    வெஸ்ட் இண்டீஸ் - 101 தோல்வி

    ஜிம்பாப்வே - 99 தோல்வி

    நியூசிலாந்து - 99 தோல்வி

    • டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 872 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.

    பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடத்தை பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
    • கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

    சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி முறையே 10 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே (13), ரியான் பராக் (26) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (25) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வமிண்டு ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், சமிண்டு விக்ரமசிங்கே, அசிதா பெர்னான்டோ மற்றும் ரமேஷ் மென்டிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு வழக்கம் போல பதும் நிசங்கா (26), குசல் மெண்டிஸ் (43) மற்றும் குசல் பெரரா (46) நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது.

    இதனால் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. சூப்பர் ஓவரில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார்.

    3 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாச, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 137 ரன்களை எடுத்தது.

    பல்லகெலே:

    இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஓரளவு தாக்குப் பிடித்தார்.

    ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 13 ரன்னில் அவுட்டானார்.

    இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதே ஓவரில் ரியான் பராக் 26 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 3 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பல்லகெலே:

    இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கைபவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

    • இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம்.
    • நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

    ஆனால் அந்தத் தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா கூறிவருகிறது. ஏனெனில் 2008-க்குப்பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஒருவேளை வரவில்லையெனில் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்தத் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதையும் தாண்டி இந்தியாவில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை துவங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு சாகித் அபிரிடி கூறினார்.

    • கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் கடுமையாக சொதப்பினார்.
    • இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

    ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த நிலையில், ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியை Unfollow செய்துள்ளார். இதன்மூலம் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025-யில் புதிய உரிமைக்காக விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.   

    • ஹர்திக் பாண்ட்யாவும் அவரது மனைவியான நட்டாசாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
    • இன்று அவர்களது மகன் அகஷ்டியா பிறந்த தினம்.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

    இதனையடுத்து நட்டாசா அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தையை இருவரும் சேர்ந்து பார்த்து கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவரது மகன் அகஷ்டியாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஹர்திக் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நீ ஒவ்வொரு நாளும் என்னை தேட வைக்கிறாய். நெருங்கிய நண்பர் குறிக்கும் விதமாக Happy birthday to my partner in crime என கூறியிருந்தார். மேலும் இதயம் முழுவதும், நீயே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நேசிக்கிறேன் என கூறினார்.

    • இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிருக்கான டி20 பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீராங்கனை சமாரி அட்டபட்டு 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதேபோல பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். 3-வது இடத்தில் தீப்தி சர்மா தொடர்கிறார்.

    ×