search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஹர்திக் பாண்ட்யாவும் அவரது மனைவியான நட்டாசாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
    • இன்று அவர்களது மகன் அகஷ்டியா பிறந்த தினம்.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

    இதனையடுத்து நட்டாசா அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தையை இருவரும் சேர்ந்து பார்த்து கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவரது மகன் அகஷ்டியாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஹர்திக் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நீ ஒவ்வொரு நாளும் என்னை தேட வைக்கிறாய். நெருங்கிய நண்பர் குறிக்கும் விதமாக Happy birthday to my partner in crime என கூறியிருந்தார். மேலும் இதயம் முழுவதும், நீயே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நேசிக்கிறேன் என கூறினார்.

    • இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிருக்கான டி20 பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீராங்கனை சமாரி அட்டபட்டு 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதேபோல பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். 3-வது இடத்தில் தீப்தி சர்மா தொடர்கிறார்.

    • டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
    • 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.

    உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ரஷித் கான் (25) ஒருவராக உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான இவர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.

    இவர் 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிராவோ உள்ளார். அவர் 543 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-

    630 - டுவைன் பிராவோ (543 போட்டிகள்)

    600 - ரஷித் கான் (438 போட்டிகள்)

    502 - இம்ரான் தாஹிர் (388 போட்டிகள்)

    492 - ஷாகிப் அல் ஹசன் (436 போட்டிகள்)

    • வங்காளதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார்.
    • லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார்.

    சமீபத்தில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    அதன்படி பீல்டிங், பேட்டிங் பயிற்சியாளர்கள் இலங்கை தொடருடன் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டுள்ளார். அதற்கு மட்டும் பிசிசிஐ எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில் வங்களாதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவு இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் அணிக்கு எதிராக நெல்லை அணி வெற்றி பெற்றது.
    • நெல்லை வீரர் மோகன் அஸ்வினை மன்கட் எச்சரிக்கை கொடுத்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவரில் 136 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து விளையாடிய நெல்லை அணி 17.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முன்னதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்த போது 15-வது ஓவரை நெல்லை வீரர் மோகன் பிரசாத் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் சிவம் சிங்கும் எதிர் முனையில் அந்த அணியின் கேப்டன் அஸ்வினும் இருந்தனர்.

    மோகன் முதல் பந்தை வீச வந்த போது அஸ்வினை மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சித்தார். பிறகு நடுவரிடம் எச்சரிக்கை கொடுத்தார். அவர் மன்கட் அவுட் செய்ய முயன்ற போது ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர்.

    அஸ்வின் பலரை மன்கட் முறையில் அவுட் செய்துள்ளார். அவரையே நெல்லை வீரர் மோகம் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 தொடரை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
    • இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது.

    டி20 தொடர் நாளையுடன் முடியவுள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் ரோகித் தலமையிலான இந்திய அணியின் களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் இன்று இலங்கை சென்றடைந்துள்ளார்.

    மேலும் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகியோரும் இலங்கைக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது.

    • இறுதிப் போட்டி சென்னையில் நடக்கிறது.
    • கோவை-திருப்பூர் அணிகள் நாளை மோதல்.

    திண்டுக்கல்:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அங்கு 9 ஆட்டங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்டமாக 8 போட்டி நெல்லையில் 3-வது கட்டமாக 6 ஆட்டங்களும் நடத்தப்பட்டது.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேர்த்து 5 போட்டிகள் திண்டுக்கல்லில் நேற்றுடன் முடிவடைந்தது.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை 4 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றன.

    நிகர ரன்ரேட் அடிப்படையில் திருப்பூர் 2-வது இடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது இடத்தையும் , திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நெல்லை ராயல் கிங்ஸ் (7 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6), மதுரை பாந்தர்ஸ் (5) சேலம் ஸ்பார் டன்ஸ் (2) ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    திண்டுக்கல்லில் நாளை இரவு 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) முதல் இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) விளையாடும்.

    கோவை அணி 'லீக்' ஆட்டத்தில் திருப்பூரை 1 ரன்னில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலியைர்-2) விளையாடும்.

    நாளை மறுநாள் (31-ந் தேதி) திண்டுக்கல்லில் நடை பெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நான்காம் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    குவாலிபையர்-2 ஆட் டம் ஆகஸ்ட் 2-ந்தேதியும், இறுதிப் போட்டி 4-ந்தேதியும் சென்னையில் நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 888 ரன்கள் அடித்துள்ளார்.

    நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

    2024 ஆம் ஆண்டில் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சேர்த்து 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும்.

    இப்பட்டியலில் குசல் மெண்டிஸ் (888*), இப்ராஹிம் சத்ரான் (844*) ரோஹித் சர்மா (833*) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிம்பாப்வே அணி அயர்லாந்துடன் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
    • இப்போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதை தொடர்ந்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் ஆண்டி மெக்ப்ரைன் ஒரே பந்தில் ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளார்.

    எந்த ஓவர் த்ரோவும் இல்லாமல் ஃபீல்டர் பவுண்டரில் லைனில் பந்தை தடுத்து வீசுவதற்குள் மெக்ப்ரைன் - லார்கன் ஜோடி ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளனர்.

    • சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்களையும், அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்களையும் சரத் குமார் 8 பந்துகளில் 9 ரன்களையும் எடுத்தனர்.

    நெல்லை சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஷ் மற்றும் சிலம்பரசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்கள், அஜிதேஷ் 43 ரன்கள் மற்றும் என்எஸ் ஹரிஷ் 22 ரன்களை விளாசினர்.

    திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், திரன் 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெரரா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார்.

    இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிஸ், நிசாங்க இறங்கினர். நிசாங்க 10 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெரரா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரனக்ளை எடுத்தது. இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    162 ரன்களை துரத்திய இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது.

    பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஒரு மணி நேர ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. டிஎல்எஸ் விதிப்படி இந்திய அணி 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

    ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

    இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைபற்றிவிட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை 162 ரன்களை எடுத்தது.

    பல்லகெலே:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிஸ், நிசாங்க இறங்கினர். நிசாங்க 10 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெராரா அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    ×