search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
    • ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராகுல் டிராவிட் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
    • சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.

    • ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சேப்பாக் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - சந்தோஷ் குமார் முறையே 51 மற்றும் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து ரஞ்சன் பால் - அபிஷேக் தன்வர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து 199 ரன்களை துரத்திய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் ஜாபர் ஜமால் 52 ரன்களையும், வசீம் அகமது 48 ரன்களையும், ராஜ்குமார் 39 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சார்பில் அஸ்வின் க்ரிஸ்ட் 2 விக்கெட்டுகளையும், கனேஷன் பெரியசாமி மற்றும் அபிஷேக் தன்வார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • தற்போது இந்திய அணி ஒரு மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது.
    • ஒரே அடியாக மூன்று அணியை தேர்வு செய்ய இயலாது.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணியில் ஒரு இடத்திற்கு மூன்று நான்கு பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு தொடக்க வீரர் என்ற ஒரு இடத்தை எடுத்துக் கொண்டால் ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ், இசான் கிஷன், அபிஷேக் ஷர்மா, கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போகிறது. இதனால் டெஸ்ட்க்கு ஒரு அணி,டி20-க்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு என ஒரு அணி என்ற மூன்று அணியை கொண்டு வரப் போவதாக கம்பீர் பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு அறிவித்தார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மூன்று அணியை தேர்வு செய்யும் முறை எப்போது வரும் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்பீர், நிச்சயமாக எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். தற்போது அணி ஒரு மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. விராட் கோலியின் ரோகித் சர்மாவும் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

    ஆனால் ஒரே அடியாக மூன்று அணியை தேர்வு செய்ய இயலாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய தேர்வு குழு தலைவர் அகார்கர், தற்போது மூன்று அணிகள் தேர்வு செய்வது குறித்து நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை. ஒரு இடத்திற்கு சரியான வீரர்களை சரியான காம்பினேஷனில் தேர்வு செய்ய வேண்டும்.

    மூன்று கிரிக்கெட் வடிவங்களுக்கும் இந்த ஃபார்முலாவை வைத்து தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்கின்றோம் என்று கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார்.
    • அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் 2- 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

    இந்த வெற்றிக்கு இங்கிலாந்தின் ஜோ ரூட் பேட்டிங்கில் 14, 122 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார். இதையும் சேர்த்து அவர் 142 டெஸ்ட் போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பாலை (11867) முந்தியுள்ள அவர் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்நிலையில் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியவதாவது:-


    இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது ஸ்பெஷலாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் விரைவாக ஸ்கோர் செய்கின்றனர்.

    அவர்கள் ஈகோவை எடுத்துக் கொள்வதாகவும் தெரியவில்லை. அவர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதற்கு ரூட் பாறையைப் போல் நின்று பேட்டிங்கில் முக்கிய பங்காற்றுகிறார். அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    ஜாம்பவான் சச்சின் 24 வருட டெஸ்ட் கிரிக்கெட் 200 போட்டிகளில் 15921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நான் எதிர்கொண்டதில் பேட் கம்மின்ஸ் மிகவும் சவாலாக பந்து வீச்சாளர்.
    • ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன்.

    பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

    இவர் தான் எதிர்த்து விளையாடிய தலைசிறந்த பேட்ஸ்மேனாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    சரி, டி வில்லியர்ஸை தவிர்த்து மற்றொரு பேட்ஸ்மேனை தேர்வு செய்தால், யாரை தேர்வு செய்வீர்கள் எனக் கேட்டதற்கு மற்றொரு பேட்ஸ்மேனும் டி வில்லியர்ஸ்தான் என பதில் அளித்தார்.

    தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கேட் கம்மின்ஸ் எனத் தெரிவித்துள்ளார். உங்களுடைய போன்புக்கில் மிகவும் பிரபலம் அடைந்த நபர் யார் என்று கேட்டதற்கு, புகழ்பெற்ற பாகிஸ்தான் பாடகர் அடிஃப் அஸ்லாம் எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தான்கிரிக்கெட் போர்டு ஷாஹீன் ஷா அப்ரிடி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு கனடாவில் நடைபெற இருக்கம் குளோபல் டி20 லீக்கில் விளையாட அனுமதி கொடுக்கவில்லை.

    • மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் முன்னேறியுள்ளது.
    • தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து பொல்லார்ட் ஆறுதல் கூறினார்.

    அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்சரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.

    இதனையடுத்து போட்டி முடிந்து பொல்லார்ட், தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜெகதீசன் 51 ரன்னிலும் சந்தோஷ் குமார் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 51 ரன்கள் எடுத்த போது ஜெகதீசனும் 56 ரன்களில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த டேரில் ஃபெராரியோ தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் 15 பந்தில் 30 எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும்.

    இதனையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால்- அபிஷேக் தன்வர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 29 ரன்னிலும் அபிஷேக் தன்வர் 26 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன்.
    • பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக கூட நியமிக்கபடாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதே போன்று ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோரும் இலங்கை தொடரில் இடம் பெறவில்லை.

    இப்படி இருக்க அடிக்கடி கம்பீருடன் சண்டை போடும் விராட் கோலியின் நிலைமை என்னனாகுமோ என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தலைப்புச் செய்தி தரும் வகையில் என்னால் பேச முடியாது. கோலிக்கும் எனக்குமான உறவு, எங்கள் இருவருக்கும் இடையேயானது. களத்தில் நாங்கள் ஒரே பகுதியில் இருக்க வேண்டும். விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன். ஆனால் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக அல்லது பின்பாக நாங்கள் என்ன விவாதித்தோம் என்பது முக்கியமல்ல.

    அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன். ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். எனவே நாங்கள் ஒன்றாக ஒரே பக்கத்தில் நின்று செயல்படுவது அவசியம்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    • டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

    மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் கலந்து கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றனர். காலை 11.40 மணியளவில் இலங்கை புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் மாலை 4.50 மணியளவில் இலங்கையில் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.

    இதில் கவுதம் காம்பீர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ரவி பிஷ்னோய், சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி20 தொடர் அட்டவணை:-

    ஜூலை 26: இலங்கை - இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

    ஜூலை 28: இலங்கை - இந்தியா 2-வது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

    ஜூலை 30: இலங்கை - இந்தியா 3-வது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

    ஒருநாள் தொடர் அட்டவணை:

    ஆகஸ்ட் 02: இலங்கை - இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

    ஆகஸ்ட் 04: இலங்கை - இந்தியா 2-வது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

    ஆகஸ்ட் 07: இலங்கை - இந்தியா 3-வது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

    • மலேசியா அணிக்கு எதிராக சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்தார்.
    • 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புலாவில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்தது.

    இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மலேசியா தரப்பில் வினிப்ரெட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மலேசியா அணி வீராங்கனைகள் இலங்கயின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட், கவிஷா தில்ஹாரி, காவ்யா காவிந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சமாரி அத்தபத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் டி20 ஆசிய கோப்பையில் முதல் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    மகளிர் டி20 ஆசிய கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர்கள்:

    1 - சமாரி அத்தபத்து: ஜூலை 2024-ல் மலேசியாவுக்கு எதிராக 119*

    2 - மிதாலி ராஜ்: ஜூன் 2018-ல் மலேசியாவுக்கு எதிராக 97*

    3 - ஹர்ஷிதா சமரவிக்ரம: அக்டோபர் 2022-ல் தாய்லாந்துக்கு எதிராக 81

    4 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் இலங்கைக்கு எதிராக 76

    5 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் யுஏஇ எதிராக 75* 

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    நெல்லை:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    ×