என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பும்ராவுடன் இணைந்து பணியாற்ற மோர்னே மோர்கல் ஆர்வம்- சகோதரர் அல்பி மோர்கல்
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு.
- மோர்னே மோர்கல் சில சிறந்த வீரர்களுடன் பணிபுரிய இருக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது சகோதரரும், முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு. மற்ற அணிகளின் பயிற்சியாளர் பதவியை விட கடினமானது. ஏனெனில் அந்த நாட்டில் கிரிக்கெட் மீதான ஆர்வம், கடந்த காலத்தில் அந்த அணி செய்துள்ள சாதனைகளை பார்க்கும் போது எந்தவித தவறுக்கும் இடம் கொடுக்க கூடாது.
மோர்னே மோர்கல் சில சிறந்த வீரர்களுடன் பணிபுரிய இருக்கிறார். இந்திய வீரர்களின் நம்பிக்கையை பெறுவது, அவர்களின் முழு திறமையை வெளி கொண்டு வர உதவுவது மோர்னே மோர்கலுக்கு முக்கியமானதாக இருக்கும்.
மோர்னே மோர்கலுக்கு மிகவும் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது எனக்கு தெரியாது. அது ஜாகீர் கான், ஜஸ்பிரித் பும்ராவாக இருக்கலாம். பும்ரா, அனைத்து வடிவிலான போட்டியிலும் உலகின் தலைச்சிறந்த பவுலராக திகழ்கிறார். தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். அவருடன் இணைந்து பணியாற்றுவதை மோர்னே மோர்கல் நிச்சயம் விரும்புவார்' என்றார்.