என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸி., பேட்டர்களை புரட்டியெடுத்த பும்ரா.. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 67/7
- முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் ஹர்சித் ரானா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து பண்ட் - நிதிஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 41 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜா- நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் களமிறங்கினர். நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்னிலும் கவாஜா 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹெட் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசினார். 11 ரன்கள் எடுத்த போது ஹர்சித் ரானா பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 6, லபுசேன் 2, கம்மின்ஸ் 3 என ஆட்டமிழந்தனர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும் ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் ஹர்சித் ரானா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தலைவன் இருக்கிறான் கலங்காதே! ??
— Star Sports Tamil (@StarSportsTamil) November 22, 2024
Back 2 Back wickets-ஐ வீழ்த்தி கெத்து காட்டிட்டாரு Captain Bumrah ?
? தொடர்ந்து காணுங்கள் Border Gavaskar Trophy | Star Sports தமிழில்#ToughestRivalry #BorderGavaskarTrophy #AUSvINDonStar pic.twitter.com/CgTLYbpQuL
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்