search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்?: யுவராஜ் கொடுத்த டுவிஸ்ட்
    X

    இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்?: யுவராஜ் கொடுத்த டுவிஸ்ட்

    • கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.
    • டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் கேரி கிர்ஸ்டன் என்ற சிறந்த பயிற்சியாளர் இருந்தார்.

    கிளப் ப்ரேரி ஃபயர் யூடியூப் சேனலில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் யுவராஜ் சிங் கலந்துரையாடினார். அப்போது தனக்கு பிடித்த இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்பதை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சவுரவ் கங்குலி, டோனி, ராகுல் டிராவிட், கும்ப்ளே ஆகியோரில் இருந்து தனக்குப் பிடித்த கேப்டனை யுவி தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சௌரவ் கங்குலி மற்றும் டோனியின் தலைமையின் கீழ் நான் அதிகம் விளையாடினேன். சவுரவ் இருந்த நேரத்தில் நான் அணிக்கு வந்தேன். கங்குலியின் கேப்டன்சியின் நல்ல விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் கங்குலி எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார்.

    கங்குலி எனக்கு, சேவாக் மற்றும் பஜ்ஜிக்கு ஆகியோருக்கு பல வாய்ப்புகளை வழங்கி தொடர்ந்து போட்டிகளில் களமிறக்கினார், இதனால் எங்களுக்கு நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்தது. மேலும் ஜாகீர் கானையும் அவர் ஊக்குவித்தார். கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.

    கங்குலிக்கு பிறகு ராகுல் சில காலம் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு டோனி கேப்டனானார்.

    டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் ஒரு சிறந்த பயிற்சியாளர் இருந்தார். கேரி கிர்ஸ்டன்.. அவர் அணியுடன் சேர்ந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்று எங்களை வீரராக ஆக்கினார். ஒரு அணியாக நாம் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் கேரி கிர்ஸ்டன்.

    டோனி ஒரு சிறந்த கேப்டன். சௌரவ் மிகவும் ஆக்ரோஷமானவர். அணியை முன்னோக்கி கொண்டு செல்வது பற்றி எப்போதும் சிந்தித்தவர். டோனியிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், அவரிடம் எப்போதும் 'பிளான் பி' இருந்தது. எனது கேரியரில் பல்வேறு வகையான கேப்டன்களுடன் விளையாடினோம்.

    பின்னர் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனானார். அணி சிக்கலில் இருந்தால், அவர் முன்னோக்கி வந்து பந்து வீசுவார். கும்ப்ளே இக்கட்டான சமயங்களில் முன்னுக்கு வரும் திறன் கொண்ட ஒரு சிறந்த கேப்டன்.

    எனக்கு அணியை கட்டமைத்த கேப்டன் சவுரவ் என்று நான் கூறுவேன். அவர் இளம் வீரர்களை முன்னோக்கி உருவாக்கி அவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றினார். நான் சௌரவை எனக்கு பிடித்த கேப்டன் என்று அழைப்பேன்.

    டி-20யின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில்:-

    ஒரு வீரராக, நான் டி20 கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மாவை தேர்வு செய்வேன். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தை மாற்ற முடியும். அவர் எனது முதல் தேர்வாக இருப்பார்.

    இவ்வாறு யுவாராஜ் கூறினார்.

    Next Story
    ×