என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கவுதம் கம்பீர் அதிகாரத்தை பறிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு
- வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் காம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் காம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும்.
இதற்கிடையே காம்பீரின் அதிகாரத்தை பறிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது. வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
நியூசிலாந்து தொடரில் ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரது முடிவு ஏமாற்றத்தை அளித்தது. மும்பை டெஸ்டில் முகமது சிராஜ், சர்பராஸ் கான் ஆகியோரை பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
கிரிக்கெட் வாரிய விதிப்படி தேர்வு விஷயங்களில் பயிற்சியாளர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முக்கியமானது என்பதால் தேர்வு குழு கூட்டத்தில் அவரை பங்கேற்க கிரிக்கெட் வாரியம் அனுமதித்து இருந்தது.
நியூசிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்வியால் வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிடும் காம்பீரின் அதிகாரம் பறிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவு நிர்ணயிக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்