search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனியை சேர்க்காதது என்னுடைய மிகப்பெரிய தவறு: தினேஷ் கார்த்திக்
    X

    டோனியை சேர்க்காதது என்னுடைய மிகப்பெரிய தவறு: தினேஷ் கார்த்திக்

    • நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார்.
    • நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சில நாட்களுக்கு முன், ஆல் டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டார். அதில் எம்.எஸ். டோனிக்கு இடம் கொடுக்கவில்லை.

    தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணி:-

    வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான். 12-வது வீரர்: ஹர்பஜன் சிங்

    கேப்டன் யார் என்றும் அறிவிக்கவில்லை. விக்கெட் கீப்பர் யார் என்றும் அறிவிக்கவில்லை. அத்துடன் 1983-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் அணியில் இடம் பெறவில்லை. ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த எம்.எஸ். டோனியுடன் பெயரும் இடம்பெறவில்லை.

    இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அத்துடன் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் டோனியை சேர்க்காதது மிகப்பெரிய தவறு எனத் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில் "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையாகவே இது மிகப்பெரிய தவறு. என்னுடைய இந்த பேச்சு வெளியானது பின்னர், இது குறித்து உணர்ந்தேன். நான் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்போது பல்வேறு விசயங்கள் நடைபெற்றன.

    நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார். நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள். நான் உண்மையாகவே ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் என நினைக்கவி்லை. விக்கெட் கீப்பராக இருந்த நான் விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×