search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    14 ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் போட்டி:  குவாலியர் மைதானம் கண்ணோட்டம்
    X

    14 ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் போட்டி: குவாலியர் மைதானம் கண்ணோட்டம்

    • வரலாற்றில் இம்மைதானத்தில் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறவில்லை.
    • குவாலியர் பிட்ச் ஆரம்பத்தில் ஸ்லோவாக இருக்கும் என்றும் நேரம் செல்ல செல்ல பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.

    வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி குவாலியர்

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மொத்தம் 14 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 13 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா வலுவான அணியாக ஜொலிக்கிறது. வங்கதேசம் 1 வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள குவாலிபயர் நகரில் இருக்கும் ஸ்ரீமந்த் மாதவரோ சிந்தியா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    கடைசியாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2010-ம் ஆண்டு இம்மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த (200*) முதல் வீரராக உலக சாதனை படைத்தார். அப்போட்டியுடன் இடிக்கப்பட்ட இம்மைதானம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 14 வருடங்கள் கழித்து இங்கே முதல் முறையாக இந்தியா விளையாடும் சர்வதேச போட்டி நடைபெற உள்ளது.

    குவாலியர் நகரில் அக்டோபர் 6-ம் தேதி வெறும் 10 - 20% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். வரலாற்றில் இம்மைதானத்தில் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறவில்லை. அத்துடன் மைதானம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனால் மைதான வரலாற்று புள்ளிவிவரங்கள் இல்லை.

    இருப்பினும் சமீபத்தில் இங்கே மத்தியப்பிரதேச உள்ளூர் டி20 தொடர் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்கள் அடிக்கப்பட்டது. குறிப்பாக இறுதிப் போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 400+ ரன்கள் அடித்தன. மேலும் குவாலியர் பிட்ச் ஆரம்பத்தில் ஸ்லோவாக இருக்கும் என்றும் நேரம் செல்ல செல்ல பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனால் இந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்ய தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

    Next Story
    ×