search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    களத்தில் தகராறு குறித்து கேள்வி எழுப்பிய கோலி.. கம்பீரின் கலகல பதில்.. வைரலாகும் வீடியோ
    X

    களத்தில் தகராறு குறித்து கேள்வி எழுப்பிய கோலி.. கம்பீரின் கலகல பதில்.. வைரலாகும் வீடியோ

    • களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர்.
    • இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.

    இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக கம்பீர் மற்றும் கோலி கலகலப்பான நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும், ஐபிஎல் தொடரின் போது பலமுறை வாக்குவாதங்களில் ஒருவருக்கொருவர் மோதி கொண்டதை காணலாம். ஆனால் தற்போது ஒரே அணியில் பயிற்சியாளராக கம்பீர் மற்றும் வீரராக விராட் கோலி இந்திய அணியில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர்.

    இருவரும் பயிற்சியின் போது சகஜமாக பேசிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர். இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

    விராட் கோலி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எதிரணியினருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்போதாவது களத்தை விட்டு வெளியே சென்று அவுட் ஆகலாம் என நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அது உங்களை அதிக உந்துதலுக்கு உள்ளாக்கியதா?

    கவுதம் கம்பீர்: என்னை விட உங்களுக்கு அதிக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அந்த கேள்விக்கு என்னை விட சிறப்பாக பதில் சொல்ல உங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.

    விராட் கோலி (சிரிக்கிறார்): நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். தவறு என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம் யாராவது சொல்ல வேண்டும், ஆம் இப்படித்தான் நடக்கும்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.



    Next Story
    ×