search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்
    X

    விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஹாரி புரூக் அரை சதம் கடந்தார்.

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது.

    இதையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் பில் சால்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 310 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹாரி ப்ரூக் 312 ரன்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள்

    312 - ஹாரி புரூக் (இங்கிலாந்து, 2024)

    310 - விராட் கோலி (இந்தியா, 2019)

    285 - எம்எஸ் டோனி (இந்தியா, 2009)

    278 - ஈயோன் மோர்கன் (இங்கிலாந்து, 2015)

    276 - பாபர் அசாம் (பாகிஸ்தான், 2022)

    Next Story
    ×