search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்த இந்தியா
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்த இந்தியா

    • 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
    • ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

    பெர்த்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங் சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

    46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

    534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை.கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா 110 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 90 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

    Next Story
    ×