search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பும்ராவுக்கு ஓய்வு?
    X

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பும்ராவுக்கு ஓய்வு?

    • நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

    இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த டெஸ்டின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×