என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
வெயிட்டு காட்டிய டாம் லேதம்.. வலுவான நிலையில் நியூசிலாந்து
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட தொடங்கியது. நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் நிதானமாக ஆடி 86 ரன்களை சேர்த்தார். இதேபோல் டாம் ப்லன்டெல் 30 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 1 விக்கெட் கைப்பற்றினார்.