search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மும்பை வான்கடே டெஸ்ட்: சுப்மன் கில், ரிஷப் பண்ட் அரைசதம்

    • சுப்மன் கில் 66 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார்.
    • ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சால் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்னும், டேரில் மிட்செல் 82 ரன்னும் அடித்தனர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 84 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    5-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். கில் 31 ரன்னுடனும், ரஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கில் நிதானமாக விளையாட ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 66 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்தியா காலை 10.45 மணி நிலவரப்படி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. கில் 62 ரன்களுடனும், பண்ட் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×