search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெர்த் டெஸ்ட்: அஸ்வின் இல்லை... ஜடேஜா இல்லை... வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
    X

    பெர்த் டெஸ்ட்: அஸ்வின் இல்லை... ஜடேஜா இல்லை... வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

    • இந்தியா மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது.
    • அஸ்வின் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம் பெறவில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஹர்சித் ராணா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்கும் என்பது உறுதியானது.

    இதனால் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலேக்ஸ் கேரி உள்ளிட்ட பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அஸ்வின் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இருவரையும் பின்னுக்குத் தள்ளி வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார்.

    கம்மின்ஸ், ஹேசில்வுட்டிற்கு எதிராக இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இருவரும் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் என்றாலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இவர்களின் சராசரி சற்று குறைவுதான்.

    வாஷிங்டன் சுந்தர் இடது கை பேட்ஸ்மேன். இதனால் அஸ்வினுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கலாம்.

    Next Story
    ×