search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 27,000 ரன்கள்.. சச்சின் சாதனையை தகர்த்த விராட் கோலி
    X

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 27,000 ரன்கள்.. சச்சின் சாதனையை தகர்த்த விராட் கோலி

    • நான்காம் நாள் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
    • இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது.

    இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் நடைபெறுகிறது. மழை மற்றும் ஆடுகளம் சரியில்லாமல் போனதால், இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில், இன்றைய நான்காம் நாள் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது.

    முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வந்த வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்ய களமிறங்கியது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது.


    இதில் இந்திய வீரர் விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இந்திய அணியில் துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களையும், ரோகித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்களையும், சுப்மன் கில் 36 பந்துகளில் 39 ரன்களைும், கே.எல். ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களையு விளாசினர்.

    இன்றைய இன்னிங்ஸில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை கடந்தார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார்.

    விராட் கோலியின் உலக சாதனைக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "விராட் கோலியின் தலைசிறந்த கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல் 27 ஆயிரம் சர்வதேச ரன்களை அவர் கடந்துள்ளார். உங்களது ஆர்வம், நிலைத்தன்மை மற்றும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை உள்ளிட்டவை கிரிக்கெட் உலகிற்கு உத்வேகம் அளிக்கின்றன. வாழ்த்துக்கள் விராட் கோலி. உங்களது பயணம் பல லட்சம் பேருக்கு ஊக்குவிக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×