என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பரபரப்பான நிலையில் "டை"யில் முடிந்த இந்தியா- இலங்கை போட்டி
- ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
- ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 56 ரன்களும், துனித் வெலாலகே 67 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித் சர்மா 47 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யரும் நடையை கட்டினார். அவர் 23 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கே.எல். ராகுல் 31 ரன்னிலும், அக்சர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அக்சர் பட்டேல் அவுட்டாகும்போது இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.
ஷிவம் டுபே ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் குல்தீப் யாதவ் (2) ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 211 ரன்கள் எடுத்திருந்தது.
20 ரன் தேவை என்ற நிலையில் ஷிவம் டுபே உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். முகமது சிராஜை வைத்துக் கொண்டு ஷிவம் டுபே அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 5 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்தார். இதனால் போட்டி டை ஆனது. அடுத்த பந்தில் ஷிவம் டுபே எல்.பி.டபிள்யூ ஆனார். ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழக்க போட்டி டையில் முடிந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்