search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    MS Dhoni
    X

    மீண்டும் இந்த Rule-ஐ கொண்டுவாங்க.. டோனிக்காக மல்லுக்கட்டும் சிஎஸ்கே - அடுத்து என்ன?

    • ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
    • விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.


    அதன்படி ஐபிஎல் முதல் சீசன் தொடங்கிய 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சிஎஸ்கே அணி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரும் போது சென்னை அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படலாம்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி வந்தால், அவரை அன்கேப்டு வீரர் (அதாவது தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) ஆக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது. இதனை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவே சிஎஸ்கே ஆர்வம் காட்டுகிறது. எனினும், இதற்கு பல அணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது ரவீந்திரா ஜடேஜாவுக்கு அடுத்தப்படியாக சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரராக டோனி இருந்தார். அன்கேப்டு வீரருக்காக ஒரு அணி ரூ. 4 கோடி வரை செலவிடும்.

    இதேபோன்ற விதிமுறை 2025 ஏலத்திற்கு முன் அமலுக்கு வரும் பட்சத்தில், இதை கொண்டே சிஎஸ்கே அணியில் டோனி தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்டகாலம் விளையாடி வரும் வீரர்களுக்கு அன்கேப்டு அந்தஸ்தை வழங்குவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×