search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: இடத்தை முடிவு செய்த பிசிசிஐ?
    X

    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: இடத்தை முடிவு செய்த பிசிசிஐ?

    • குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.110.5 கோடி உள்ளது.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளன.

    பஞ்சாப் அணி இரண்டு வீரர்களையும், ஆர்.சி.பி. அணி மூன்று வீரர்களையும், டெல்லி அணி நான்கு வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு வீரர்களையும் தக்க வைத்துள்ளது. வீரர்களை தக்க வைத்தது போக ஒவ்வொரு அணியிடமும் புதிய வீரர்களை வாங்குவதற்கு கணிசமான தொகை கையிருப்பு உள்ளது.

    இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து பிசிசிஐ சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×