என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
அந்த வீரரை தவிர அனைவரையும் கழற்றி விடுங்கள்- ஆர்சிபி அணிக்கு ஆர்.பி.சிங் யோசனை
- மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
- தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும். ஏலத்தில் ஒரு அணி ரூ.120 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த ஊதியம் ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும்.
இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வீரர்களை எடுப்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக பெங்களூரு அணியில் ரஜத் படிதாரை விடுவித்து விட்டு பிறகு ஏலத்தில் அவரை ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு ஆர்.டி.எம். சலுகை மூலம் வாங்க முடியும். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜையும் இழுத்துக் கொள்ளலாம். சிராஜை தக்க வைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் ஏலத்தில் அவர் அவ்வளவு விலைக்கு போகமாட்டார்.
எனவே பெங்களூரு அணியினர் புதிய மனநிலையுடன் ஏலத்துக்கு செல்ல வேண்டும். அந்த அணிக்கு விராட் கோலி தேவை. அவர் அணிக்காக பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ளார். அவர் மிகவும் முக்கியமான வீரர். அதனால் பெங்களூரு அணி அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இந்த அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் மதிப்பு ரூ.18 மற்றும் ரூ.14 கோடியாக இருப்பதை நினைத்து பார்க்க முடியாது' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்