search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20-யில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றி: கொண்டாடி தீர்த்த அயர்லாந்து மகளிர் அணி- வைரல் வீடியோ
    X

    டி20-யில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றி: கொண்டாடி தீர்த்த அயர்லாந்து மகளிர் அணி- வைரல் வீடியோ

    • 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அயர்லாந்து வீழ்த்தியது.
    • டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது.

    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை அயர்லாந்து அணி வீராங்கனைகள் உள்பட ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×