search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை டெஸ்ட்: சாதனை படைத்த ஜான்சன், ஜெயசூர்யா
    X

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை டெஸ்ட்: சாதனை படைத்த ஜான்சன், ஜெயசூர்யா

    • பிரபாத் ஜெயசூர்யா அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆவார்.

    இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 27-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 149 ரன்களுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்சன் மற்றும் இலங்கை வீரர் ஜெயசூர்யா ஆகியோர் பந்து வீச்சில் சாதனை படைத்துள்ளனர்.

    இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 101 ஆக (17 டெஸ்ட்) உயர்ந்தது. டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த சாதனையாளர் பட்டியலில் 2-வது இடத்தை 4 வீரர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

    அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார்

    ஜார்ஜ் ஆல்பிரட் லோமன் (இங்கிலாந்து) - 1886-ல் 16 டெஸ்ட் போட்டிகள்

    பிரபாத் ஜெயசூர்யா (இலங்கை) - 2024-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    யாசிர் ஷா (பாகிஸ்தான்) - 2014-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    சார்லி டர்னர் (ஆஸ்திரேலியா) - 1887-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    சிட்னி பார்ன்ஸ் (இங்கிலாந்து) - 1901-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    கிளாரி கிரிம்மெட் (ஆஸ்திரேலியா) - 1925-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) - 2011-ல் 18 டெஸ்ட் போட்டிகள்

    இதேபோல ஜான்சன், உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜான்சன் படைத்துள்ளார்.

    WTC வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு:-

    மார்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - 2024-ல் இலங்கைக்கு எதிராக 7/13

    மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/23 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022

    கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) - 7/45 வெஸ்ட் இண்டீஸ் எதிராக 2024

    ஷர்துல் தாக்கூர் (இந்தியா) - 7/61 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022

    மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/67 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024

    42 ரன்னில் ஆல்-அவுட் ஆன இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 71 ரன்னில் ஆட்டமிழந்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது.

    இலங்கையை சுருட்டுவதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு மொத்தம் 83 பந்துகளே தேவைப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் குறைந்த பந்துகளில் 'சரண்' அடைந்த அணி இலங்கை தான். 1924-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து 75 பந்துகளில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்னில் சுருட்டியதே இந்த வகையில் மோசமானதாக நீடிக்கிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2013-ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து 45 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் முந்தைய குறைந்த ஸ்கோராக இருந்தது.

    Next Story
    ×