search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உன் பேர சொல்லும் பட்டிதொட்டி.. இப்படி ஒரு லீடர் தேவை.. ரோகித்தை புகழ்ந்த மோர்க்கல்
    X

    உன் பேர சொல்லும் பட்டிதொட்டி.. இப்படி ஒரு லீடர் தேவை.. ரோகித்தை புகழ்ந்த மோர்க்கல்

    • பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே அவர் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்டார்.
    • அப்படி விளையாடும் போது எப்படிப்பட்ட எதிரணியும் ஒரு கால் பின்னே வைக்கும்.

    கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்சையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்நிலையில் ரோகித் போன்று ஒரு லீடர் தேவை என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கவுதம் கம்பீர் கண்ணோட்டத்திலும் நாங்கள் முடிந்தளவுக்கு போட்டியை வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம். அதை முன்னோக்கி நின்று செய்ய உங்களுக்கு ஒரு லீடர் தேவை. அதை பலமுறை செய்தது போல் இன்றும் ரோகித் செய்தார். குறிப்பாக பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே அவர் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்டார்.

    அப்படி விளையாடும் போது எப்படிப்பட்ட எதிரணியும் ஒரு கால் பின்னே வைக்கும். எனவே எங்களுடைய கேப்டன் முன்னோக்கி அணியை எடுத்துச் சென்றதைப் பார்த்தது நன்றாக இருந்தது. அவரின் அதிரடி பேட்டிங் அற்புதம். வங்கதேசம் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பது எங்களுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

    இவ்வாறு மோர்கல் கூறினார்.

    Next Story
    ×