search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடுத்த பிசிசிஐ செயலாளரா? விளக்கமளித்த ரோகன் ஜெட்லி
    X

    அடுத்த பிசிசிஐ செயலாளரா? விளக்கமளித்த ரோகன் ஜெட்லி

    • பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.

    ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

    Next Story
    ×