என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ரோகித், பண்ட் ஏமாற்றம்: அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்- கைவசம் 6 விக்கெட், தேவை 218... தப்பிக்குமா இந்தியா?
- ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் டக்அவுட்.
- ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிது. சுழற்பந்து வீச்சுக்கு சாதனமாக ஆடுகளத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2-வது இன்னிங்சில் 255 ரன்களும் சேர்த்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டதால், 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இலக்கை எதிர்கொள்வது மிகக்கடினம்.
இருந்தாலும் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்டும் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
இதனால் ரன்கள் வந்துகொண்டே இருந்தனர். மதிய உணவு இடைவேளை வரை 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்தது. ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும், சுப்மன் கில் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தது. ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்திருக்கும்போது சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்து 5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது இந்தியா 25 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 218 ரன்கள் தேவை. இன்று முழுவதும் விளையாடினால் இந்தியா வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆனால் இன்று முதல் நிலைத்து நிற்குமா? என்பது சந்தேகம்தான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்