search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு- ரச்சின் ரவீந்திரா
    X

    எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு- ரச்சின் ரவீந்திரா

    • நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.
    • ஆனால் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேயத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, பெங்களூருவில் நடைபெறவுள்ள முதல் போட்டி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    குடும்ப இணைப்பு காரணமாக இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் வெலிங்டனில் பிறந்து வளர்ந்தவன். அப்படி பார்க்கையில் நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.

    ஆனால் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று. கூட்டத்தில் சிலர் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் எனது அப்பாவும் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். மேலும் எங்கள் அணியில் கேன் வில்லியம்சன், டாம் லேதம், கான்வே, டேரில் மிட்செல் என சில தரமான வீரர்கள் உள்ளனர்.

    ரிவர்ஸ் ஸ்வீப்பிங் மற்றும் ஸ்வீப்பிங் செய்வதில் கான்வே மிகவும் திறமையானவர். டேரில் மிட்செலும் அப்படித்தான். அதனால் நாங்கள் எங்ளுடைய சிறந்த டெக்னிக்கை கண்டறிந்து அதற்கேற்வாறு செயல்படுவதில் உறுதியுடன் இருக்கிறோம். ஆனால் இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த ஏதெனும் தகவல் வரும்.

    என்று ரவீந்திரா கூறினார்.

    Next Story
    ×